மிச்சிகனில் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மிச்சிகனில் கர்நாடக சங்கீத அரங்கேற்றம்

ஆகஸ்ட் 22,2019  IST

Comments (1)

டிராய், மிச்சிகன்: டிராய் மிச்சிகனிலுள்ள பாரதீய டெம்பெல் அரங்கத்தில் பிரஷாந்த் சங்கரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் இனிது நடந்தது. இவ்விழாவில் பிரபல கர்நாடக இசைக்க கலைஞர் திரு.நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து பிரஷாந்தை ஊக்குவித்தார். மேலும் தமது உரையின்போது பிரஷாந்த் பாடிய தோடி மற்றும் பூர்வி கல்யாணி ராக ஆலாபனைகளைப் பாராட்டியதோடு, நிறைய கச்சேரிகளுக்குச் சென்று தனது கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

மிச்சிகனிலுள்ள சாதனா கர்நாடிக் மியூசிக் அகாடமியின் இயக்குனர் மற்றும் பிரபல பாடகரான சாந்தபிரகாஷ் அவர்களிடம் ஆறு ஆண்டுகளுக்கும் மேல் முறையாக கர்நாடக இசையினை பயின்ற பிரஷாந்த், முதலில் ரஞ்சனி ராகத்தில் வர்ணத்தைத் தொடங்கி பிறகு முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய விநாயகரைப் போற்றும் பாடல், பிறகு ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், செங்கல்வராய சாஸ்திரி, ஷ்யாமா சாஸ்திரி, பாபநாசம் சிவன், தியாகராஜர், அம்புஜம் கிருஷ்ணா, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் என முறையே இசை வல்லுநர்கள் இயற்றிய பிரபல பாடல்களை ஸ்ருதி சுத்தமாக லாவகமாகப் பாடினார். முத்தாய்ப்பாக தமது குரு சாந்தபிரகாஷ் அவர்கள் அமைத்த சூர்யா ராகத்திலான தில்லானா ஒன்றையும் பாடினார்.


விழாவிற்குத் தலைமை தாங்கியவர் பிரபல கர்நாடக இசை வல்லுநர் திரு.மதுரை சுந்தர் அவர்கள். இவர் தமது உரையில் ,கச்சேரி முழுவதிலும் பிரஷாந்தின் அமைதியான பாவத்தினையும் ,அலட்டிக்கொள்ளாமல் பெரிய சாஹித்யங்களை பிரஷாந்த் கையாண்ட விதத்தினையும் பாராட்டினார்.

இவ்விழாவின் பிரதானப் பேச்சாளரான திரு.டாக்டர் .ரோஜர் நடராஜன் அவர்கள் கிளீவ்லன்ட் தியாகராஜ விழாக் குழுவின் முக்கிய உறுப்பினர். யூனிவர்சிட்டி ஆஃ மிச்சிகனில் கணிதத் துறையின் ஆக்ச்சுவரி துறையின் இயக்குனர். இவர் இசைத்த துறையிலும் கல்வித் துறையிலும் மாணவர்களை ஊக்குவிப்பதிலும் உதவுவதிலும் வல்லுநர். பிரஷாந்தின் பாடல் திறனை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது கல்வி மேம்பாட்டிற்கும் பல நல்ல அறிவுரைகளைக் கூறினார்.

இறுதியாக பிரஷாந்தின் தாயார் ஷங்கர் அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.

- தினமலர் வாசகி காந்தி சுந்தர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Sridharan - Chennai,India
23-ஆக-201907:38:13 IST Report Abuse
Sridharan அருமையான தோடி. சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us