கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 22,2019  IST

Comments

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், TLK காம்ப்ளஸ், SW Winner Banquet ஹாலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ( இந்திய குடியுரிமை) மன்றம் சார்பாக 73வது இந்திய சுதந்திர தின விழா ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி காலை 8.30 மணி அளவில் இந்திய தேசியக் கொடியேற்றம் மற்றும் இந்திய தேசிய கீத பாடலுடன் விழா துவங்கியது. இவ்விழாவில் மலேசிய இந்தியர்களின் முன்னோடி டான் ஶ்ரீ டாக்டர். தேவகி கிருக்ஷ்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சுதந்திரதின விழாவில் குழந்தைகளுக்கான இசை, நடனம், வினாடி வினா, நீயா நானா குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடுசெய்யப்பட்டு, குழந்தைகளை திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்கள் பங்குகொண்ட கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான இறகு பந்து போட்டி ஏற்பாடு செய்து வெற்றிபெற்ற அணிகளுக்கு சுதந்திர தின கோப்பை விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. பெரியவர்கள், குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை உக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது. இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சுதந்திரதின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழா குறித்து விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சியும் விழாக்குழுவிற்கு நன்றியும் தெரிவித்தனர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றம் சார்பில் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். தற்போதய இவ்விழா மலேசியாவில் இரண்டாவது சுதந்திரதின விழா கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் 600 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திய தமிழ் குடும்பங்களை ஒருங்கிணைத்து உணவு மற்றும் அனைத்து விழா ஏற்பாடுகளை டாக்டர்.சத்திவேல், டாக்டர். பாலாஜி, திரு.பாலாஜி நாராயணன், திருமதி. கோமதி, திருமதி. பூர்ணிமா, திருமதி. சவிதா, திரு. விஜய் ஆனந் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் : வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை தாக்குதல் சோதனை 3வது முறையாக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் ...

செப்டம்பர் 18,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us