வெலிங்டனில் கர்நாடக இசைக்கச்சேரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெலிங்டனில் கர்நாடக இசைக்கச்சேரி

ஆகஸ்ட் 25,2019  IST

Comments

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் திரு கிருஷ்ணா ராமரத்தினம் அவர்களின் கச்சேரி நடந்தது. நியூ ஸிலாந்து இந்தியன் பைன் ஆர்ட்ஸின் ஆதரவில் நிகழ்ந்த இக்கச்சேரியைத் துவக்கி வைத்த சங்கத் தலைவர் திரு. பாலாஜி, ரசிகர்களின் முழு ஆதரவில்லாமல் உலகின் இக்கோடியில் இசைச் சங்கம் நடத்துவது இயலாத காரியம் என்று கூறினார். பின்னர் திரு சுந்தர் இசைக்க கலைஞர்களை அறிமுகம் செய்யக் கச்சேரி துவங்கியது.

முன்னாள் இசை வல்லுநர் திரு ஏ. ஜி . சாத்தூர் சுப்ரமணியஅய்யரின் பேரரான திரு கிருஷ்ணா அவர்கள் பஹுதாரி ராக வர்ணத்துடன் துவக்கினார். தொடர்ந்து சக்ரவாகம், லதாங்கி, அடாணா, ஆனந்தபைரவி ராகங்களில் கீர்த்தனைகள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். ஓரங்கசாயீ என்ற காம்போஜி ராக கிருதியை முக்கிய கீர்த்தனையாக எடுத்துக்கொண்டு நிரவல் பாடி, பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்திற்கே கூட்டிச்சென்றார். அதனைத் தொடர்ந்து கீரவாணி ராகம், தானம், பல்லவி பாடி, அதிலேயே ராக மாலிகை (ஹம்சநாதம், ஆபேறி, நளினகாந்தி) கோர்த்து ரசிகர்களை மெய்ம்மறக்க வைத்தார்.

திரு கிருஷ்ணாவின் குரல் மிக இனிமையாக இருந்தது.வயலின் வாசித்த கிருஷ்ணாவின் துணைவி திருமதி மஹதி பாலாஜி, கிருஷ்ணாவிற்கு ஈடுகொடுத்து நன்கு இசைத்தார். மிருதங்கம் வாசித்த திரு வெங்கட் ராமகிருஷ்ணன் அருமையாக வாசித்து தனி ஆவர்தனத்தில் அனைவரையும் தாளம் போட வைத்தார்.

பாவயாமி கோபாலம் என்ற பிரபலமான பாட்டையும் தனஸ்ரீ தில்லானாவையும் பாடி கச்சேரியை நிறைவு செய்தனர்.

திருமதி காயத்ரி தர்மாவின் அருமையான நன்றி உரையுடன் கச்சேரி முடிந்தது.

ஒரு இனிய ஞாயிறு மாலையை இனிய இசை மூலமாக செலவிட்டு இன்ப இறை உணர்வுடன் இல்லம் திரும்பினார் ரசிகர்கள்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)