சான் ஆண்டோனியோவில் வாழை இலை விருந்துடன் இன்பச் சுற்றுலா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் வாழை இலை விருந்துடன் இன்பச் சுற்றுலா

ஆகஸ்ட் 27,2019  IST

Comments

சுற்றுலா என்றாலே துள்ளிக் குதிக்கும் மனசு ! அங்கு உணவும் உண்டெனில் கேட்கவே வேண்டாம். அதிலும் பெண்களுக்கு 'அப்பாடா' என்றிருக்கும், அட்லீஸ்ட் இந்த ஒருநாள் சமைப்பதில் இருந்து விடுதலை.

ஆகஸ்ட் 10, 'லாஸ் என்சினோஸ் ஹில் கன்ட்ரி எஸ்டேட்' எனும் இடத்தில் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் இவ்வருடத்தின் சுற்றுலா மிகப்பெரியளவில் ஏற்பாடு செய்திருந்தது, அதுவும் வாழை இலையுடன் கூடிய விருந்துடன்

சுமார் 400 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மாலை மூன்று மணிவாக்கில் ஆரம்பித்து இரவு ஒன்பது மணிவரை நடந்தது. குழந்தைகளின் மனங்கவர் பாப்-கான், பஞ்சுமிட்டாய் மற்றும் மோர், லெமனேட், நிலக்கடலை, தேன் மிட்டாய், இலந்தை வடை, கடலைமிட்டாய் என ஒரு திருவிழா களம் போல காட்சி அளித்தது.

பின்னர் அனைவரும் கலந்துகொள்ள, திறந்த வெளியில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர். குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

பின் உள்ளரங்கில் இதுவரை தமிழ்ச் சங்கம் கடந்த மாதங்களில் நடத்திய பெண்கள்,குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. அதேபோல் சில மாதங்களாக நடந்த ஆண்களின் கிரிக்கெட் போட்டிகளில் வென்ற அணிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

சுற்றுலாவின் சிறப்பம்சத்திற்கு வருவோம். வாழை இலை விருந்து! சுமார் 27 வகைப் பதார்த்தங்களுடன் கூடிய விருந்து! கல்யாணங்களில் பரிமாறும் முறையில் மிக நேர்த்தியாக வழங்கினர். விருந்தின் இறுதியில் ஐஸ்கிரீம், பீடா என அமர்க்களப்படுத்தி விட்டனர்.

இவ்விருந்து சிறப்பாக நடக்க பேருதவியாக இருந்தது தன்னார்வர்களின் சிறந்த ஒத்துழைப்பு ! விருந்திலும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் உதவிய தன்னார்வலர்களுக்கு ஒரு' ஓ 'போடலாம்.

அனைத்து நிகழ்வுகளையும் மிக அழகாய் படமெடுத்துக் கொடுத்த திரு.மோகன் அவர்களுக்கு நன்றிகள்.

இத்தனை அருமையான நிகழ்வை நடத்த பல மாதங்களாய் திட்டமிட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் சுப்பாநாயுடு அவர்களுக்கும், சிறந்த ஐடியாக்கள் அளித்த,புத்துணர்ச்சி மிக்க அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)