சான் ஆண்டோனியோவின் கிரிக்கெட் போட்டிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவின் கிரிக்கெட் போட்டிகள்

ஆகஸ்ட் 30,2019  IST

Comments

விளையாட்டு வேடிக்கை தான்.

வேடிக்கையிலும் விழிப்புணர்வுடன்

விரைந்து முடிவெடுக்கும் திறனையும்,

நம்மைப் பற்றி சுயமதிப்பீடு செய்துகொள்ளவும்,

சகிப்புத்தன்மையையும், நட்பையும்

தலைமைப்பண்பையும் வளர்க்கும்

கருவியே விளையாட்டு.

பந்தையக் குதிரையின் இலக்கு

வெற்றி எல்லை மட்டுமே.

அது தன் இலக்கை மட்டுமே

மனதில் கொண்டு ஓடும்.

அதேபோல வெற்றிக்கோப்பையை மனதில் கொண்டே கிரிக்கெட்டில் ஆடிய 'அவென்ஜ்ர்ஸ்' அணி, வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாது இன்று அந்த பிரமாண்டமான வெற்றிக்கோப்பையை கைகளில் ஏந்தியுள்ளது !

2017 ஆம் ஆண்டு முதல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு முன் சான் ஆண்டோனியோ டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோஸியேஷன் அமைக்கப்பட்டு, இங்குள்ள அனைத்து கிரிக்கெட் குழுக்களையும் ஒன்றிணைத்து முறையான போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நம் தமிழ்ச் சங்கமும் இணைந்து வருடாவருடம் நடக்கும் போட்டிகளில் பங்குகொள்ளத் தொடங்கினர்.

இவ்வாண்டு நம் அணி மூன்றாம் முறையாக வெற்றிக்கோப்பையை வென்று வந்துள்ளது பாராட்டத்தக்கது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வர்.

பதினாறு அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட தகுதி ஆட்டங்கள் மே மாதத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நடைபெற்றன. பின் கால் இறுதி போட்டிக்கு எட்டு அணிகள் தேர்வாயின. அதன்பின் அரையிறுதியில் நான்கு. அதிலிருந்து தேர்வான இரண்டு அணிகளுக்கும் நடப்பதே 'நீயா-நானா'

இவ்வருடம், இதுவரை விளையாடி வெற்றிபெற்ற 'அவென்ஜர்ஸ்-சிக்ஸர்ஸ்' அணிகள் கடும்போட்டிகளுக்குத் தயாரானது. குடும்பத்தாரும் நண்பர்களும் கொடுத்த எல்லையில்லா உற்சாகத்தோடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இங்குள்ள ''டாம்'ஸ் ஸ்லிக்' மைதானத்தில் நடந்தது சூடுபறக்கும் இறுதிப்போட்டி !

தமிழ்ச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இப்போட்டியில் 'அவென்ஜர்ஸ்' அணி வெற்றி பெற்று, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்- 'சாட்ஸ்' வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது. 'அவென்ஜர்ஸ்' அணிக்கும் இது இரண்டாம் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்ததில் இருந்து சாட்ஸ் - 'ஹேட்ரிக் ' எனப்படும் மும்முறையும் கோப்பையை கைப்பற்றியிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது ! இவ்வீரர்களின் கிரிக்கெட் ஆர்வத்தினை மதித்து,உற்சாகப்படுத்தி அதற்கென ஓர் அழகான கோப்பையை தயாரித்து, வெற்றிப்பணமாக ஒரு உயர்ந்த தொகையையும் அளித்து கௌரவப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ்ச் சங்கத்திற்கு மிகப்பெரிய பாராட்டுகளை கூறுவோம் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்...

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நவம்பர் 2ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் குழந்தைகள் தினவிழா

நவம்பர் 2ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் குழந்தைகள் தினவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us