லேகோஸ், நைஜீரியா: 15 நாட்களுக்கு முன்னரே மூஷிகவாகனின் முதல் வழிபாடு துவங்கிவிட்டது. ஆகஸ்டு 19, திங்கட்கிழமை - சங்கடஹர சதுர்த்தி முதல் செப்டம்பர் 2 - விநாயகர் சதுர்த்தி முடிய 15 நாட்கள் தொடர்ந்து காலை 9 மணி அளவிலும் மாலை 6 மணி அளவிலும் லேகோஸ் ஶ்ரீ விஞ்னேஷ்வருக்கு லட்சார்சணை செய்யப்பட்டு வந்தது.
விநாயகர் சதுர்த்தி அன்று இருட்டை அகற்ற வந்த விடியற்காலை 6 மணிக்கு அக்ஞானத்தை அழித்து ஞானத்தை அருள ஞானகாரகனை ப்ரார்தித்து கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஆகம விதிப்படி அனைத்து அபிஷேகம், ச்சத்ரம், சாமரம், கீதம், வாத்தியம் போன்ற ராஜ உபச்சாரங்களுடன் மகேக்ஷ்வர புத்ரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரு சிவகுமார் சிவாச்சாரியார் அவர்கள் அருகம்புல், மலர்மாலைகளுக்கு இடையே சந்தனகாப்பில் நறுமணம் வீசிபடியே, ஏகதந்தன் அருள் பாலிக்கும்படி அம்சமான அலங்காரம் செய்திருந்தார். 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோயில் குழுமம் மோதகமும் சுண்டலும் பிரசாதமாக வழங்கியதுடன் பிள்ளையார் சதுர்த்தி இனிதே நிறைவுற்றது.
மக்கள் தங்கள் வீட்டிலும் கஜாணனனுக்கு வழிபாடு செய்து ஸர்வகார்ய சித்திக்கு வேண்டினர்.
- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...
டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...
கொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...
டிசம்பர் 05,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.