சிங்கப்பூரில் கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கதைக்களம்

செப்டம்பர் 03,2019  IST

Comments

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கதைக்களம் செப்டம்பர் முதல் தேதி மன்ற அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. முதல் அங்கமாக மாணவர் சரவணன் தான் எழுதிய கதையைப் படித்தார்.அடுத்து செல்வி கவிமலர் தமது கதையை வாசித்தார் . பொதுப் பிரிவுப் போட்டிக்கு வந்த கதையை வித்யா அருண் வாசித்தார் . கதை விமர்சனம் ஒன்றை பாஸ்கி படித்தார்.

சிங்கை உள்ளூர் எழுத்தாளர் அங்கத்தில் , பத்திரிகை, மேடை , வானொலி , தொலைக்காட்சி , நாடக எழுத்தாளர் - இயக்குனர் எஸ்.எஸ். சர்மாவின் நாடகங்கள் பற்றியும் , அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றியும் விளக்கப் படங்களுடன் சியாம் குமார் விவரித்தார் .இவ்வங்கத்தை மலையரசி வழிநடத்தினார். ஶ்ரீலங்கா எழுத்தாளர் ராணி சீதரன் , “ சிறு கதையின் உருவகமும் உள்ளடக்கமும் “ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் நா. ஆண்டியப்பன் , தமதுரையில் நிகழவிருக்கும் கண்ணதாசன் , கம்பர் விழா, சிங்கப்பூரின் 200 ஆவது ஆண்டினை யொட்டி 200 சிங்கை எழுத்தாளர் பற்றிய நூல் வெளியீடு பற்றி விளக்கினார் .

இம்மாத சிறு கதைப் போட்டியில் முதற் பரிசினை சபரிஶ்ரீயும் , இரண்டாவது பரிசினை சியாம் குமாரும் , மூன்றாவது பரிசினை கீழை அ. கதிர் வேலுவும் பெற்றனர். சிறந்த கதை விமர்சனத்திற்கான முதற் பரிசு கீழை அ. கதிர் வேலுவுக்கும் இரண்டாவது பரிசு விஜிக்கும் வழங்கப்பட்டது . முகநூல் பிரிவு போட்டிச் சிறுகதைகளுக்கான சிறந்த கருத்தைப் பதிவு செய்த காசிநாதனுக்கு கீழை அ. கதிர்வேலு புத்தகப் பரிசு வழங்கினார் . கதைக்களப் பொறுப்பாளர் பிரேமா மகாலிங்கம் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.


- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

சென்னையில் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்த நிலையில், ...

செப்டம்பர் 19,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)