கலிபோர்னியாவில் மகரிஷி பரஞ்சோதியார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கலிபோர்னியாவில் மகரிஷி பரஞ்சோதியார்

செப்டம்பர் 04,2019  IST

Comments

 திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை , தென்கயிலை எனும் பரஞ்ஜோதி நகர் , உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்ஜோதியார், 2020 - இல் உலக மாந்தர் அனைவரும் வளமும் நலமும் மகிழ்வும் நிறைவு பெறவும் , உலக மாந்தர் அனைவரும் அமைதி பெறவும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக நல்லெண்ணச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கலிபோர்னியா சென்றடைந்தார் . விமான நிலையத்தில் அவர்தம் சீடர்கள் பெருமளவில் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர் .

முப்பதாம் தேதி கலிபோர்னியா - சாந்தா கிளாரா ஶ்ரீ காளீஸ்வர்ர் ஆலய மண்டபத்தில் ,கலிபோர்னியா உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. உடல் - உள - உயிர் மேம்பாட்டுக்கு உதவி மனிதனை மாமனிதனாக்கி தெய்வ நிலைக்கு உயர்த்தும் ஜீவ ரக்சா பயிற்சி மற்றும் உயிர் , உயிரின் மூலம் ,உயிர் தாங்கி, உயிர் விளைவு என்ற இரகசியங்களை அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொள்ளவும் , அவற்றை மற்றவர்களுக்கு விஞ்ஞான - மெய்ஞான நுட்பங்களோடு எடுத்துக் கூறி மகரிஷி விளக்கமளித்தார் . கலிபோர்னியாவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களோடு, பிற இனத்தவரும் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

ஆன்மிகப் பயணத்தில் , சுவிட்சர்லாந்தில், சூரிச் கம்பர் கழகம் - மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறை மற்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து சூரிச்சில் நடத்தும் முதலாவது உலக கம்பர் மாநாட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். ஜெர்மனி - பிரான்ஸ் நகரில் நடைபெறும் நிகழ்வுகளிலும் தமது 42 நாள் பயணத்தில் பங்கேற்க உள்ளார் 

- தினமலர் வாசகர் வெ. உத்தமன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

எல்லைப் பகுதிகள் குறித்த வரலாறு

புதுடில்லி: நாட்டின் எல்லை பகுதிகள், அப்பகுதியில் உள்ள மக்களின் கலாசாரம், பாதுகாப்பு படைகளின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்த வரலாற்றை தொகுக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் ...

செப்டம்பர் 19,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us