அமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்

செப்டம்பர் 11,2019  IST

Comments

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த , திருமூர்த்தி மலை , தென்கயிலை எனும் பரஞ்சோதி நகர் , உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் , தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆகஸ்டு 28 - லிருந்து செப்டம்பர் 9 ஆம் தேதி வரை கலிபோர்னியாவில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் .வட அமெரிக்க உலக சமாதான ஆலய ஏற்பாட்டில் அக தவ சிறப்புப் பயிற்சி முகாம்கள் , ஆழ்நிலை குண்டலினி சிறப்பு தவ பயிற்சிப் பட்டறைகள் , அந்தர் யோகா முதலியவை பதினான்கு டிகிரி செண்டிகிரேட் தட்ப வெப்ப நிலையில் , இயற்கை எழில் சூழ்ந்த மலைச் சிகரத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வு சர்க்கரைப் பந்தலில் பூ மாரி பொழிந்தது போல் ரம்யமாக அமைந்து ஆன்மிக சக்தியைத் தூண்டுமாறு அமைந்தது.இளமை காத்து நீண்ட காலம் இந்த நிலவுலகில் வாழ்வது மனித சாதனைக்கு உட்பட்டதே என்பதை இம்முகாம்கள் உணர்த்தின. இது குண்டலினி யோகாவின் உச்சக் கட்டப் பேறாகும். குருமகான் இம்முகாமில் ஆற்றிய உரையில் விஞ்ஞான ரீதியாக விளக்கினார் .உணவு, உறக்கம், உழைப்பு,உடலுறவு,எண்ணம் - இந்த ஐந்து வகையில் அலட்சியம் , மித மிஞ்சிய உபயோகம் , முரண்பட்ட உபயோகம் இவற்றால் உடல் இயக்கம் பாதிக்கப்படுவதையும் குருமகான் குறிப்பிட்டார். உடற்பயிற்சி , உளப்பயிற்சி, உணவு முறை இவைகளால் உடல் நலம் காத்துக் கொள்ள இப்பயிற்சிகள் மிகவும் பயனுடையதாக இருக்கும் என பங்கேற்றவர்கள் கூறினர் .

செப்டம்பர் 9,10,11 ஆம் தேதிகளில் வட அமெரிக்க ஒமேகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மகரிஷி புறப்பட்டார் . சுமார் பன்னிரண்டு நாட்கள் ஆன்மிக அமுத மழையில் நனைத்த மகரிஷியின் சீடர்கள் திரண்டு பிரியா விடை தந்து வழியனுப்பினர்.


- தினமலர் வாசகர் பு. ஞானி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)