அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

செப்டம்பர் 16,2019  IST

Comments

துபாய் : அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்களின் ஓணம் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இதனையொட்டி கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பிடித்த வகை, வகையான உணவுகளை தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

Advertisement
Advertisement
Advertisement

சிவக்குமாருடன் சோனியா சந்திப்பு

புதுடில்லி : டில்லி திகார் சிறையில் பண மோசடி குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, காங்., தலைவர் சோனியா இன்று காலை சந்தித்து ...

அக்டோபர் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us