ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

செப்டம்பர் 22,2019  IST

Comments

 ஹூஸ்டன் : ஐந்து வயதிலிருந்து நாட்டியம் பயின்ற ஓர் சின்னஞ்சிறு கிளி, இன்று தேர்ந்த நடன மங்கையாக ஒரு மிகச் சிறந்த மேடையில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்வதை பார்க்கும் பெற்றோருக்கு என்ன தோன்றும் !



'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக்கேட்ட தாய்' 


இங்கு மகள் எனக்கொள்ளலாம்.

விஜயா - திருவேங்கடம் அவர்களின் புதல்வி, டாசன் உயர் நிலைப் பள்ளி மாணவியுமான அம்ரிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம், பெற்றோரும் மற்றோரும் ஆசிரியபெருமக்களும் கண்களும் மனங்களும் குளிர, ஆகஸ்ட் 17, 2019 ம் நாள், சான் ஜெஸிந்தோ அரங்கில் நடைபெற்றது. ஐந்து வயதில் டாக்டர் ரத்னா குமார் அவர்களிடம் தொடங்கிய பயணம், திடமான நடன அமைப்புகளைக் கற்றவர், அதன் பின் 'சிலம்பம்' பள்ளியில் டாக்டர் லாவண்யா ராஜகோபால் அவர்களின் மாணவியானார். இன்று அமிர்தாவின் நடன ஆற்றலுக்கு பெரும் காரணகர்த்தா இவர்களே. இவர்கள் இருவருமே சிறப்பு விருந்தினராகவும், தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

சிலம்பம் பள்ளியின் மாணவர்களின் அழகான இறைவணக்கத்துடன் விழா தொடங்க, சௌந்தர்யம் நிரம்பிய நாயகி அமிர்தா மேடையேறி  முழு முதற்கடவுள் விநாயகரின் பாடலுக்கு நடனமாடி, பின் அமிர்தவர்ஷினி ராகத்தில் ஜதீஸ்வரம், சண்முகப்ரியா ராகத்தில் முருகப்பெருமானின் பெருமை, மகிஷாசுரமர்த்தினி என்ற வர்ணத்தில் ஆடியும் அரங்கத்தை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். அமிர்தாவின் நடன குருக்கள் மிகப்பெருமையுடன் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர். பின் அவர் சகோதரர், தோழி, தாய் மாமா, பெரியப்பா மற்றும் பெற்றோர் வாழ்த்துக்களுடன் இறுதியில் அமிர்தா அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார். பெரியப்பா அமிர்தாவிற்கு 'குட்டி வைஜெயந்திமாலா' எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார்.

அமிர்தாவின் நடனத்தை சிறப்பு செய்த ஸ்ரீசன்விதா ஸ்ரீதரின் இனிமையும் கம்பீரமும் நிறைந்த குரல், அபிஷேக் பாலகிருஷ்ணனின் வயலின், நாகா ஸ்ரீநிதி குருவிடாவின் மிருதங்கம், ஆசிரியர் லாவண்யாவின் நட்டு வாங்கம், அவர் மாணவி வெண்ணிலா  சதீஷ்  அவர்களின்  நட்டுவாங்கம் இவை அனைத்தும் அழகுக்கு அழகு, மெருகுக்கு மெருகும் சேர்த்து அற்புத அரங்கேற்றம் நிறைவேறச் செய்தது என்றே சொல்லலாம். அம்ரிதா, தன் நடன நிகழ்ச்சியின் பண வெகுமதியை, யூனிவர்சிட்டி ஆப் ஹூஸ்டன், தமிழ்த் துறை ஆரம்பிக்கும் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இத்தனை சிறப்பான குணமுடைய குழந்தையும் பெற்றோரும் மிகவும் பாராட்டுக்குரியவர்களே. தினமலர் சார்பாக வாழ்த்துக்கள் !

இவருக்கு தமிழோடு, தமிழ் கலாச்சாரத்தையும் சேர்த்து கற்றுக் கொடுத்த தமிழ் ஆசிரியர் திருமதி. வசந்தி ராமன் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள். குறிப்புகள் அளித்தமைக்கு நன்றிகள். இம்மாதிரிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தின் நம்பிக்கைகள்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

Advertisement
Advertisement
Advertisement

முதல்வர் பெயரில் கார் ஓட்டியவர் கைது

ஐதராபாத் : ஆந்திராவின் முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதல்வரின் பெயரைப் பொறித்த பலகையுடன், கார் ...

அக்டோபர் 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us