பிரான்ஸ் தமிழ் கண்ணதாசன் கழகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸ் தமிழ் கண்ணதாசன் கழகம்

செப்டம்பர் 27,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ் கண்ணதாசன் கழகம்: இச்சங்கம் 12 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் (டாக்டர்) என்றெல்லோராலும் அழைக்கப்படும் சிவப்பிரகாசம் அவர்களால் பாரிசுக்கு கிழக்கே உள்ள மோ என்ற நகரத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவில் பிரஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட 4 காலனிகளை சேந்தவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறைந்த அங்கத்தினர்களைக் கொண்டதாக இருந்த இச்சங்கம் வருடங்கள் போகப்போக பல நுற்றுக்கணக்கான அங்கதிர்களை உள்ளடக்கியதாக உருவெடுத்தது.

இந்நகரத்தின் நகரத்தந்தை இச்சங்கத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளார். அவர் பிரென்ச் நாட்டின் அரசியலில் பெரும் பதவிகளை வகித்தவர். நமது கலாச்சாரத்தில்,பண்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவே இச்சங்கம் வேண்டும்போதெல்லாம் மோ நகத்தில் உள்ள பெரிய அரங்கை இலவசமாக கொடுத்துதவினார். அங்கு பல விழாக்களை நடத்தியது இச்சங்கம், குறிப்பாக கண்ணதாசன், காந்தி , பாரதியார் போன்றவர்களின் பிறந்த மற்றும் நினைவுநாள் நடைபெறும். நமது பண்பாட்டின் வெளிப்பாடாக விளங்கும் பொங்கல், தீபாவளி, தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் இந்தியாவின் சுதந்திர, குடியரசு தினங்கள் போற்றவைகளும் நடைபெறும். 

பெரும்பாலான விழாக்களில் பட்டிமன்றம், பரதநாட்டியம், திரைப்பட இசை நடனங்கள், வினா விடை புதிர்கள் , எழுத்துப்போட்டி,நடனப்போட்டி (ஆண் பெண்களின்) பாட்டுப்பாடி (முடிந்த வார்த்தகிகளிலிருந்து தொடங்க்குவது) கட்டுரை, கவிதை போன்ற போட்டிகளும், குறுக்கெழுத்து இலக்கண போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு,மேலும் குலுக்கல் சீட்டில் முதல் பரிசுமுதல் ஆறுதல் பரிசுவரையில் வழங்கப்படும். விழாக்களில் இந்தியாவிலிருந்து வருகைதரும் அல்லது விழாவிற்கென்றே வரவழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் சமயங்ககளில் அரங்கமே நிரம்பிவழியும். 

அண்ணாதுரை கண்ணதாசன், சுகி சிவம், மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் இதில் அடங்குவர். புதுச்சேரியில் புகழ்பெற்ற வில்லுப்பாட்டு பட்டாபிராமனின் மாணவி பவானி ராமுவின் வில்லுப்பாட்டு பிரான்சில் மிகவும் எல்லோராலும் ரசிக்கப்படும் ஒன்று, இச்சங்கத்தின் விழாவில் இது கட்டாயம் இடம்பெறும். இச்சங்கத்தில் நம் வழித்தோன்றல்களுக்கு தமிழ் ஆங்கிலம் பரதநாட்டியம், திரைப்பட இசைநடனம் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது. விழாக்களின் நிறைவில் வருகைதந்த அனைவருக்கும் மாலையில் முறுக்கு, பக்கோடா, சுண்டல் தேநீர் மற்றும் இரவுஉணவும் வழங்கப்படுவதை வழக்கமாகக்கொண்டுள்ளது இச்சங்கம். இவையாவற்றையும் இச்சங்கத்தின் செயற்குழு அங்கத்தினர்களும் பல நலவிரும்பிகளும் பொறுப்பேற்றுக்கொண்டு செவ்வனவே செய்துகொடுப்பார்கள். பரிசுப்பொருட்களை பாரிஸ் நகரத்தில் உள்ள பல இந்திய அங்காடிகள் கொடுத்துதவுவார்கள். 


- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கொரோனா: தமிழில் ஆஸ்திரேலிய அரசு விழிப்புணர்வு

கொரோனா: தமிழில் ஆஸ்திரேலிய அரசு விழிப்புணர்வு...

சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி

சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி...

உடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்

உடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்...

ஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி !

ஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி !...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us