சோஷலிச சீனா, உலகின் கீழக்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது: ஷிச்சின்பிங் பெருமிதம்! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சோஷலிச சீனா, உலகின் கீழக்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது: ஷிச்சின்பிங் பெருமிதம்!

அக்டோபர் 01,2019  IST

Comments

நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் சீனாவின் அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், சோஷலிச சீனா, இன்று உலகின் கீழக்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. சீனாவின் தகுநிலையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. சீன மக்கள் மற்றும் சீனத் தேசம் முன்னேறுப் போக்கை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

சீனா தனது முன்னேற்றப் போக்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப் பின்பற்றி, மக்களே முதன்மை என்பதில் நிலைத்து நின்று, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தைக் கடைப்பிடித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தத்துவம், அடிப்படை நெறி, அடிப்படை நெடுநோக்கு ஆகியவற்றை பன்முகங்களிலும் செயல்படுத்தி, அருமையான வாழ்க்கை மீதான மக்களின் ஆர்வத்தை நிறைவேற்றி, புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

மேலும், அமைதியான ஒன்றிணைப்பு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை சீனா கடைப்பிடித்து, ஹாங்காங் மற்றும் மகௌவின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி, தைவான் நீரிணை இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்த ஷிச்சின்பிங், சீனர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


மேலும அவர் கூறுகையில் முன்னேற்றப் போக்கில் அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா எப்போதுமே நடைபோட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு தொலைநோக்கைச் செயல்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.





மனிதகுலத்தின் வரலாற்றில் சீனாவின் கடந்த காலம் மிக முக்கியமானப் பதிவாகக் காணப்படுகிறது. சீனாவின் தற்காலம் மக்களின் முயற்சிகளோடு படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருப்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். மேலும், கட்சி உறுப்பினர்கள், படைவீரர்கள், தேசிய இனத்தவர்கள் அனைவரும் நெருக்கமாக ஒன்றுபட்டு, சீனத் தேசத்தின் மாபெரும் மலர்ச்சிக்கான கனவை நனவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us