பிரான்சில் புரட்டாசி 3 ம் சனிக்கிழமை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் புரட்டாசி 3 ம் சனிக்கிழமை

அக்டோபர் 08,2019  IST

Comments

பிரான்சில் புரட்டாசி 3 ம் சனிக்கிழமை 05/10/2019அன்று கிரங்கி சனாதன பக்த பரிபாலன சங்கத்தில் சிறப்பாக நடந்தது. பெருமாளுக்கு மிகவும் முக்கிய படையல்களில் ஒன்றான 'தளியல்' எனப்படுவது என்ன என்பதற்கு செய்முறை விளக்கம் போல் பக்தர்கள் யாவரும் 'நாராயண கோபாலா' என்று வீடுவீடாக சென்று அவர்கள் இடும் அரிசியை பொங்கலிட்டு (தளியல் போட்டு) பூஜை செய்யவேண்டும். எனவே இன்றைக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் யாவரும் ஒரு பிடி அரிசி,மற்றும் காணிக்கையாக தங்களால் இயன்ற நாணயம் ஒன்றை எடுத்து வரவேண்டும் என்ற அறிவிப்பின்படி பூஜையில் கலந்து கொண்டார்கள்.

பரந்தாமனுக்கு ஏன் 'நாராயண கோபாலா' என்றும் 'கோவிந்தா' என்று கூக்குரல் இடவேண்டும் என்பது பற்றி தியாகராஜனின் விளக்க உரை மிக அருமையாக இருந்தது. மேலும் இன்று 'வள்ளலார்' என்றழைக்கும் இராமலிங்க ஸ்வாமிகள் திருஅவதார நாள் அமையப்பெற்றது மிக பொருத்தமான ஒன்று. 'பசி' என்று வந்தவர்களுக்கு 'புசி' என்று ஒரு கவளம் உணவு வழங்கல் வேண்டும். அன்னாரின் திருவருட்பா அகவலிலிருந்து சில வரிகளை பாராயணம் செய்தார்கள். சென்னை கந்தகோட்டத்தில் எழுந்தருளி, வள்ளலாருக்கு மிகவும் மனதில் நிற்கும் தெய்வமாகிய தமிழ் கடவுள் முருகப்பெருமான் மீது அவர் பாடிய 'ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' பாடலை மனமுருகி ராஜராஜன் பாடினார்.

பக்தர்கள் யாவரும் பஜனைப்பாடல்களை கோவிந்தசாமி, முருகையன் இவர்களுடன் இணைந்து பாடி பூஜையில் மெய்மறந்து மனமுருகி வேண்டிக்கொண்டார்கள். யாவருக்கும் தளியலுடன், துளசி தீர்த்தம் நாள்முழுவதும் விரதமிருந்தவர்களுக்கும் மற்றும் வந்த யாவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. நிறைவில் நாராயணனின் அருளாசி பெற்ற மனதுடன் சென்றார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்...

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)