சிங்கப்பூரில் சரஸ்வதி பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சரஸ்வதி பூஜை

அக்டோபர் 08,2019  IST

Comments

சிங்கப்பூர் ஆலயங்களிலும் இந்துக்கள் இல்லங்களிலும் அக்டோபர் ஏழாம் தேதி சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் கலைமகள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கருணையே வடிவான அம்பிகை வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்து வீணையைக் கரங்களில் ஏந்தி கலைமகளாய் எழுந்தருளி வேதத் திருவிழிகளால் அருள்பாலித்த தெய்விகக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

கள்ளமற்ற முனிவர் வடிவில் சிவாச்சார்யார்கள் மழலையர்க்குக் கருணை வாசகத் ( சங்கல்பம் ) திருமந்திரம் ஓதி வித்யாரம்பம் செய்து வைத்தது கண்கொள்ளாக் காட்சியாகும். மழலையர் ஒவ்வொருவருக்கும் வெள்ளைத் தாமரையும் உபயதாரர் சமர்ப்பித்த நோட்டுப் புத்தகங்கள் எழுதுகோல் அளித்தபோது அவர்கள் முகங்களில் “ உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்ளின்று ஒளிரும் “ கலைமகள் காட்சி தந்தாள்.

கலையரங்கில் கொள்ளை இன்பம் கூறும் பாவலர் உள்ளத்தின் குலவு கவிதை பாடி மாதரார் இசையாஞ்சலி செலுத்தினர். நடனமணிகள் பரதமாடி நாட்டியாஞ்சலி சமர்ப்பித்தனர். ஞானமும் பக்தியும் பெருக அருள்மிகு காளியம்மன் ஆலயம் கலைமகளருளாய் விளங்குமாறு ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பங்கேற்ற பக்தப்பெருமக்களனைவருக்கும் அருட் பிரசாதமும் அன்னதானப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்...

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

டிசம்பர் 15ல் ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)