கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாம் ஆண்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாம் ஆண்டு விழா

அக்டோபர் 12,2019  IST

Comments

 

கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் வெற்றி பயணத்தின் முதலாம் ஆண்டு விழா தலை நகர் தோஹாவில் அமைந்துள்ள சைத்தூண் உணவகத்தில், விருந்து மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மன்ற உறுப்பினர்களான காவலர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தார், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்து, மாலை பொழுதை மகிழ்ச்சியான நினைவுகளாக பதிய வைத்தனர். 

மன்றத்தின் செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து இணை- துணை உறுப்பினர்களான குரு, பால்ராஜ், உமாஷங்கர், வெங்கட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கர், 'மக்கள் தலைவர் ரஜினி- ஒரு வாழ்த்துப்பா' என்னும் தலைப்பில் நெடுங்கவிதை வாசித்தார். கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கடந்த ஓராண்டு ஆற்றிவந்த சமூக பணிகள் உள்ளிட்ட ஆண்டறிக்கையை தகவல் தொழில் நுட்ப செயலாளர் செந்தில் படித்தார், அப்போது திரையில் ஒலி -ஒளிகாட்சியாக QRMM ஆற்றிய சமூக பணிகள் காண்பிக்கப்பட்டது. 

தொடர்ச்சியாக பெரியவர், குழந்தைகள் என அனைவருக்குமான ரஜினி சம்பத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவருக்கும், கலந்து கொண்ட அனைத்தது குழந்தைகளுக்கும் பரிசு வழங்கி பெருமை படுத்தியது கத்தார் ரஜினி மக்கள் மன்றம். பின்னர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு சைவ-அசைவ விருந்தினை அனைவரும் மகிழ்ச்சியோடு உண்டு நிறைவாக வாழ்த்தினர். அதை தொடர்ந்து இணை செயலாளர் முத்து வந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.

ஒவ்வொரு மன்ற உறுப்பினருக்கும் அவர்களின் குடும்ப புகைப்படம் மற்றும் கத்தார் ரஜினி மக்கள் மன்றம் அடையாள சின்னம் அச்சடிக்கப்பட்ட தேநீர் கோப்பை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. திருமதி நிர்மலா குரு இந்த விழாவினை இயல்பாக, நேர்த்தியாக தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் விருந்தினரையும் பங்குபெற வைத்து ஊடாடும் நிகழ்ச்சியாக நடத்தி வைத்தார். 'இது ஒரு குடும்ப விழா போல குதூகலமாக இருந்தது , மன நிறைவையும், நீங்க நினைவுகளாக மனதில் என்றும் நிற்கும்' என ஒவ்வொருவரும் கூறியது கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் வெற்றி என மன்ற உறுப்பினர்கள் பெருமை கொண்டனர்.

- தினமலர் வாசகர் எஸ்.சிவசங்கர்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)