கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழ் இல்லத்தரசிகள் தீபாவளி சந்தை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழ் இல்லத்தரசிகள் தீபாவளி சந்தை

அக்டோபர் 13,2019  IST

Comments

கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) சங்கம் - மலேசியா சார்பாக தீபாவளி சந்தை அக்டோபர் 12 சனிக்கிழமையன்று தலைநகர் கோலாலம்பூரில் குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு, கலாச்சார உடைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் போன்ற பல்வேறு அரங்கங்கள் அமைத்திருந்தனர்.

இவ்விழாவிற்கு கோலாலம்பூரில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் வந்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். இவ்விழாவை சிறப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் இருந்து வந்திருந்த கிராமிய மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் திரு வேல்முருகன் மற்றும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி அனிதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இல்லத்தரசிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

இவ்விழாவை டாக்டர் சத்திவேல், டாக்டர் பாலாஜி, திரு பாலாஜி நாராயணன், திருமதி கோமதி, திருமதி சவிதா, திருமதி பூர்ணிமா, திரு விஜய் ஆனந்த் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவானது மலேசியா தலைநகரில் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் விதமாக அமைதிருந்ததாக இவ்விழாவிற்கு வந்திருந்தோர் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us