பேராக் மாநில இணைப்பாட நன்மதிப்பு விருது: பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளி முதல் நிலை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பேராக் மாநில இணைப்பாட நன்மதிப்பு விருது: பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளி முதல் நிலை

அக்டோபர் 13,2019  IST

Comments

மலேசிய, பேரா மாநில, பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் இன்னொரு மகாத்தான சாதனை படைத்திருக்கிறது. பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் குறைந்த மாணவர்கள் பள்ளி பிரிவில்(149 மாணவர்களுக்கும் கீழ்) பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது. பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் 500 ரிக்கிட்டும் வழங்கப்பட்டது. பேரா மாநில நிலை இணைப்பாட நன்மதிப்பு விருதளிப்பு விழாவில் மாநில தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் அஜிஸ் பின் பாரி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

பேராமாநிலத்தில் 852 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில் 427 பள்ளிகள் 150 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாகும். இந்த 427 பள்ளிகளில் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளியை வெற்றி பெற்ற பள்ளியாக தேர்வு குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இப்பிரிவு மலாய்,சீனம் மற்றும் தமிழ் ஆகிய பள்ளியை உள் அடங்கியதாகும். இவ்விருதளிப்பு விழாவில் விருது பெற்ற ஒரே தமிழ்ப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வரும் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு இவ்வெற்றி மாபெரும் வெற்றியாகும். 24 மாணவர்களைக்கொண்டு வெற்றி நடை போட்டுவரும் இப்பள்ளி கடந்தாண்டும் இப்பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவில் தேசிய நிலைக்கு தேர்வாகிய எட்டுப்பள்ளிகள் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளி ஒரு பள்ளியாக இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்குத் தேசிய நிலையில் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

கோவாவில் கடற்படை விமானம் நொறுங்கியது

பனாஜி : இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29 கே ரக பயிற்சி போர் விமானம், கோவாவில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய போது நெறுங்கி விழுந்தது. விமானத்தில் இருந்த விமானிகள் ...

நவம்பர் 16,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us