ஆஸ்திரேலிய தங்ககடற்கரையில் நவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலிய தங்ககடற்கரையில் நவராத்திரி

அக்டோபர் 14,2019  IST

Comments

  கான்பெர்ரா: ஆஸ்திரேலிய தங்க கடற்கரை இந்து கலாச்சார சங்கத்தின் சார்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நெராங் சமுதாய மையத்தில் தங்க கடற்கரை இந்து கலாச்சார சங்கத்தலைவர் சுனில் ஷர்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் நரேன் சிவகுமரன், லட்சுமி சித்திரசேனன் வரவேற்றனர். வசந்தா அரவிந்தனின் பக்தி பாடலுடன் விழா துவங்கியது. தலைமை விருந்தினர்களான குயின்ஸ்லாந்து மாகாண பார்லிமென்ட் உறுப்பினர் முர்ரே வாட், சுற்றுலா தொழில் மேம்பாட்டு உதவி அமைச்சர் மேகன் ஸ்கான்லான், ஆஸ்திரேலிய பார்லிமென்ட் உறுப்பினர் சாம் ஓ’கானோர் ஆகியோரை, தங்க கடற்கரை இந்து கலாச்சார சங்கத்தலைவர் சுனில் ஷர்மா வரவேற்றார். நவராத்திரியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.

மதுர வாணி இசைப் பள்ளி, ரிதம் இந்திய நாட்டியப் பள்ளி, மால்வா கிராமப்புற நாட்டிய அகாடமி மாணவர்களின் நடன, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கச் செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார். 200க்கும் மேற்பட்ட இந்திய சமுதாயத்தினரும் இதர சமுதாயத்தினரும் இதில் கலந்து கொண்டனர். இந்திய விருந்துடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

24ல் பிரதமர் மோடி சென்னை வருகை?

சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயலருமான எச்.ராஜாவின் மகள் சிந்துஜா - சூர்யாவின் திருமணம், 15ம் தேதி, காரைக்குடி, ஆனந்த நகரில் நடந்தது. திருமண ...

நவம்பர் 19,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us