மாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்

அக்டோபர் 14,2019  IST

Comments

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக சிறப்பு வாய்ந்தது. 1977 ல் கட்டப்பட்ட இக்கோவிலில் பல வருடங்களாக நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இது ஒரு சக்தி பீடம் என்பதால் இவ்வருடத்தின் கொலு 'ஸ்த்ரீ சக்தி' எனும் அடிப்படையில் திட்டமிடப்பட்டு, புராணங்கள், இதிகாசங்கள்,தமிழ் இலக்கியங்கள்,காப்பியங்கள் இவை அனைத்திலிருந்தும் எடுத்துக்காட்டாய்த் திகழும் பெண்களின் மகிமையை விளக்கும் நோக்கத்துடன் கடந்த ஆறு மாதமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பாக அமைக்க பாடுபட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.பத்மினி ரங்கநாதன், திருமதி.நாச்சாள் சேதுராமன் மற்றும் அவர்கள் குழு அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள் !

ஆண்டாளின் கதை, கண்ணகியின் சிலம்பம் கொண்டு போராடிய வரலாறு, பாஞ்சாலி சபதம், சீதையின் லவ-குஷனுடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய உத்திரகாண்டத்தில் வரும் கதை இப்படி அவர்களின் வாழ்க்கையின் அர்த்தம் நிறைந்த பகுதிகளை பலவித முறைகளில் அனைவருக்கும் புரியும் வண்ணம் படிக்கவும்,பார்க்கவும் மிக அழகாய் அமைத்திருந்தது அற்புதமான ஒன்று !

அடுத்து கொலுப்படியின் சிறப்பு. இவ்வருடம் உலகறிந்த அத்திவரதர் வருடம் என்பதால் 3 டி முறையில் தெப்பக்குளம் போல படிகள் அமைத்து, கீழே ஓர் தெப்பக்குளமும் கட்டி, அதில் அத்திவரதர் இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான இப்படிகளில் கொலு பொம்மைகள் அழகாய் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஞ்சநேயர் பற்றிய முழு கதை, கஜேந்திர மோக்ஷம், கும்பகர்ணன் பற்றிய கதை இன்னும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கதைகள் என்று காணக் கண் கோடி வேண்டும் என்பது போல அற்புதமாய் அமைத்துள்ளனர்.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பலவகை சிறப்பான அலங்காரங்கள், அபிஷேக ஆராதனைகள், வெள்ளிக்கிழமை சுவாசினி பூஜை அன்று பெண்களுக்கு புடவைகள் வைத்துக்கொடுத்தல் என அருமையான பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி நாட்கள் முடிந்தாலும் இம்மாதம் முழுவதும் கொலு அப்படியே இருக்கப்போகிறது. ஏனெனில் இங்குள்ள பள்ளி,கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள் நம் இந்துக்கலாச்சாரத்தின் மகிமை அறிந்து பள்ளி நேரங்களிலேயே குழுக்களாக வந்து பார்த்துவருகின்றனர். டெக்சாஸ் மற்றும் பல பகுதிளிலிருந்தும் மக்கள் வந்து பார்த்து வருகின்றனர்,அதனால் தீபாவளி விழா வரை தொடரப் போகிறது. கிட்டத்தட்ட 30 ,000 பேர் பார்வையிடக் கூடிய கோலாகல திருவிழாவாகவே அமைந்துள்ளது ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us