சான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா

அக்டோபர் 14,2019  IST

Comments

சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். நண்பர்களும்,உறவினர்களும் ஒருவருக்கொருவர் வீடுகளுக்கு நேரில் சென்று தாம்பூலங்கள் பெற்றுக்கொண்டு,மன மகிழ்வையும் பகிர்ந்து கொண்டு நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நம் மக்கள் ஒன்பது நாட்களும் கோவில்களுக்கும், கொலு வைத்திருந்த வீடுகளுக்கும் நம் கலாச்சார ஆடைகளும்,அணிகலன்களும் அணிந்து சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

கொலு புகைப்படங்களை வழங்கியவர்கள்: சீதா கார்த்திக், நித்யா மோகன், சவீதா சங்கர், கீதா பரத், சகுந்தலா ராஜன், வைஷ்ணவி விக்னேஷ், வர்ஷா கிருஷ்ணகுமார், திவ்யா ராஜன், ரம்யா கார்த்திக், ஆர்த்தி ஸ்ரீராம், சௌமியா கண்ணன், கவிதா ஹரி, பானுமதி சிவா. பவித்ரா பரத் கோபாலன், லேகா லக்ஷ்மி, காயத்ரி சுந்தர்.

முதல் முதலாக கொலு பொம்மைகளை வரிசையாக படிகளிலும், விதவிதமான தீம்களிலும் பார்த்த குழந்தைகள் அசந்துவிட்டனர் என்றே சொல்லலாம். பெற்றோர் இந்த சந்தர்ப்பத்தில் நவராத்திரியின் மகிமையையும் இதன் சிறப்பையும் விளக்கி கூற ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ்நாட்டில் வாழ்ந்த நினைவுகளைத் தந்த நவராத்திரிக்கு நன்றிகள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)