தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம்

அக்டோபர் 15,2019  IST

Comments

ஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், மற்றும் மிக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் இறைப்பணியையும் பக்தி கலாச்சாரத்தை தன் நாமசங்கீர்த்தனத்தால் பரப்பி வருகின்ற ஸ்ரீ வெங்கடாச்சலத்தின் புதல்வன்ஸ்ரீ தீரஜ் வெங்கடாச்சலம் அவர்களின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சென்ற சனிக்கிழமையன்று 12/10/2019 ஆக்லாந்தில் உள்ள டோரதி வின்ஸ்டோன் மையத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ தீரஜ் பதினோரு ஆண்டு காலமாக இசை பயின்று வருகிறார். அவர் ஆக்லாந்தில் சங்கீத பாரதி இசைப்பள்ளியில் ஸ்ரீமதி பத்மா கோவர்தனிடம் இசை பயின்றார். நியூசிலாந்து கர்னாடிக் சொசைட்டி நடத்திய தேர்வுகளில் வெற்றி பெற்று 2016ஆம் வருஷம் பைன் ஆர்ட்ஸில் டிப்ளமோ பெற்றார். மேலும் புகழ் பெற்ற மிருதங்க வித்துவான் ஸ்ரீ சுரேஷ் ராமச்சந்திராவிடம் மிருதங்கமும் தீரஜ் கற்று வருகிறார். மேலும் டாக்டர் அசோக்மலூர் அவர்களிடம் வயலின் பயின்று வருகிறார். பல இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

மேலும் கர்நாடக சங்கீதத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் பெற்றோரின் சம்மதத்துடன் தீரஜ் தன்னுடைய கல்லூரி படிப்பை ஓராண்டு நிறுத்தி வைத்து சென்னை சென்று அங்கு புகழ் பெற்ற சங்கீத வித்துவான் கலைமாமணி ஸ்ரீ சூர்யப்ரகாஷ் அவர்களிடம் குருகுலம் இருந்து கற்றார். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலே நடந்த கச்சேரியில் அவருடன் வயலினில் ஹெச். எம். ஸ்மிதா அவர்களும், பிரபல மிருதங்க வித்வான் ஸ்ரீமுருகபூபதி அவர்கள் மிருதங்கமும், ஸ்ரீ மடிப்பாக்கம் முரளி கடமும், தீரஜின் சகோதரி குமாரி ஆதிரா வெங்கடாச்சலம் தம்புராவும் இசைத்தார்கள்.

பப்பாக்குரா ஸ்ரீ கணேஷ் கோயிலின் தலைமை குருக்களான ஸ்ரீ சந்துரு அவர்கள் நடத்திய விநாயகர் பூஜையுடன் கச்சேரி தொடங்கியது. தீரஜ் பைரவி ராகத்தில் அட தாள விரிபோணி வர்ணத்தை விரிவாக பாடி கச்சேரியை ஆரம்பித்தார். அடுத்து கணநாயகனை தொழுது வல்லப நாயக - பேகட ராக முத்துஸ்வாமி கீர்த்தனையை தீரஜ் பக்குவமாய் பாடினார். தொடர்ந்து 'கா வா வா கந்தா வா என்ற வராளி ராக கீர்த்தனை அழகாக பாடி அரங்கிலிருந்து பலத்த கைதட்டலை பெற்றார். பின்னர் தீக்ஷிதரின் தன்யாசியில் பரதேவதா , பஹுதாரி ராகத்தில் ப்ரோவ பாரமா, முகாரியில் சரணம் ஐயப்பா என்ற கீர்த்தனைகளை பாடினார்.

பின் பிரதான ராகமாக கீரவாணி ராகத்தை எடுத்துக்கொண்டு, அழகான ஆலாபனை செய்து பெரியசாமி தூரன் இயற்றிய புண்ணியம் ஒரு கோடி என்ற பாடலை கல்பனா ஸ்வரங்களுடன் அருமையாக பாடி ரசிகர்களை அசத்திவிட்டார். தன்னை விட மூத்த கலைஞர்கள் தன்னுடன் உள்ளனர் என்பதை உணர்ந்து, பக்குவமாக பாடி, குருவுக்கு பெருமை சேர்த்தார். ஸ்மிதா அவர்கள் அவருடைய பாடலோடு இசைந்து தன் வயலினில் தன் முத்திரையை பதித்தார். ஸ்ரீமுருகபூபதி மற்றும் ஸ்ரீ முரளி அவர்களின்தனி ஆவர்த்தனம் மிகச்சிறப்பாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது.

தொடர்ந்து தீர சங்கராபரணத்தில் பஞ்ச நடை தாளத்தில் ராகம் தானம் பல்லவி ஆரம்பித்தார் . பல்லவியை ராக மாலிகையாக தொடுத்தார், தொடர்ந்து தன்னுடைய மிருதங்க குரு ஸ்ரீ சூர்யபிரகாஷ் அவர்கள் இயற்றிய 'ராகங்களே பாடல்களே” என்ற பாடலை இருபதுக்கும் மேற்பட்ட ராகங்களில் பாடி கைதட்டலை பெற்றார். ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு ராகத்தின் பெயரைக்கொண்டு அமைந்தது இப்பாடலின் சிறப்பு.

பின்னர் குரு மஹராஜ் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் அவர்கள் இயற்றிய எப்படி கேட்டால் என்ற ஆபேரி ராக பாடலை பாடி மீண்டும் அவரின் குரு ஸ்ரீ சூர்ய பிரகாஷ் இயற்றிய தில்லானாவை பாடினார். நல்ல அனுபவமிக்க புகழ்பெற்ற வாத்திய காரர்களுடன் தீரஜ் இசைந்து சிறப்புற மங்களத்துடன் கச்சேரியை இனிதாக பாடி முடித்து அரங்கத்தின் நீண்ட நேர கைதட்டல்களை பெற்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் தீரஜ் வெங்கடாசலத்தின் குருக்களான ஸ்ரீ சுரேஷ் ராமச்சந்திரா, டாக்டர் அசோக், கலைமாமணி ஸ்ரீ சூர்யப்ரகாஷ் மற்றும் திருமதி பத்மா கோவர்தனன் ஆகியோர் தங்கள் மாணவனின் சிறப்பை எடுத்துரைத்தனர். இனிதே தங்களின் புதல்வன் அரங்கேற்றத்தை முடித்து கொடுத்த இசை குழுவினருக்கும் குருக்களிற்கும் தீரஜின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர். ஸ்ரீ சூர்யா பிரகாஷ் மாணவனை பாராட்டி பேசியபோது தீரஜின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய பெற்றோரான ஸ்ரீ வெங்கடாச்சலம் மற்றும் கவிதா வெங்கடாச்சலம் முயற்சியும் உழைப்பும் மிக முக்கிய காரணங்கள் என்றும் கூறினார். இறுதியில் தீரஜ் குருவை வணங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)