பிரிஸ்பேனில் ஈஸ்வராலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் ஈஸ்வராலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி

அக்டோபர் 15,2019  IST

Comments

பிரிஸ்பேனின் ஈஸ்வராலயா கலைக்கூடம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழாக்களுக்கு முன்னர் தமது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி, ஃபாரஸ்ட் லேக் புனித ஜான் ஆங்கிலிகன் பள்ளி கலையரங்கில் 21 செப்டம்பர் 2019, சனிக்கிழமையன்று நடைபெற்றது.

கணேச வந்தனம் மற்றும் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சுமார் 5 வயதுள்ள சிறுமிகள் பங்கெடுத்தனர். ஏறக்குறைய 21 நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு வயது மாணவியர்களும் பங்கெடுத்து வண்ண விளக்கொளிகளுக்கிடையே கண்ணைக் கவரும் ஆடைகளுடன் தத்தமது திறமைகளை வெளிக்காட்டினர்.

கண்களுக்கு விருந்து ஒருபுறமிருக்க, நடனங்களுக்கு இடையிடையே காதுகளுக்கு விருந்தளிக்கும் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

என்றும் போல் இந்த ஆண்டும் நிகழ்ச்சியைத் திறம்பட அளித்த நாட்டியப்பள்ளியின் ஆசிரியை திருமதி மங்கா சுரேந்தர் மற்றும் அவரது மாணவியரும் பாராட்டுக்குரியவர்கள்.

- நமது செய்தியாளர் ஆசோ ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us