பிரிஸ்பேனில் அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் அரங்கேற்றம்

அக்டோபர் 15,2019  IST

Comments

 

பிரிஸ்பேனைச் சேர்ந்த சுப்பராமன்-ஜெயஶ்ரீ தம்பதிகளின் புதல்வியும், மயூராலயா நாட்டியப்பள்ளியின் மாணவியுமான செல்வி மேகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃபாரஸ்ட் லேக் புனித ஜான் ஆங்கிலிகன் பள்ளி கலையரங்கில் 28 செப்டம்பர் 2019, சனிக்கிழமையன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், நாராயண கௌத்துவம், பதம், நாச்சியார் திருமொழி, தில்லானா மற்றும் பாராதியார் பாடலும் இடம் பெற்றது. நாட்டியப்பள்ளியின் ஆசிரியை திருமதி மயூரி தங்கராஜா நட்டுவாங்கம் செய்ய, திருமதி சுஷ்மிதா இரவி பக்க இசை பாடினார். பக்க வாத்தியத்தில் முரளி கிருஷ்ணா வயலினும், ஆர்தவன் செல்வநாதன் மிருதங்கமும், ஹரி சிவனேசன் வீணையும், சுரேஷ் தியாகராஜன் புல்லாங்குழலும் இசைத்தனர்.



திருமதி மயூரி தங்கராஜாவிற்கு நாட்டியம் பயிற்றுவித்த நாட்டிய ஆசிரியை திருமதி சூர்யகலா சந்திரிகா ஜீவாநந்தன் கனடாவிலிருந்து வந்திருந்து நாட்டியத்தின் நுட்பங்களையும், தனது மாணவி மயூரி தங்கராஜா மற்றும் அவரின் மாணவி மேகாவின் நாட்டிய வளர்ச்சி குறித்தும் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கலாரசிகர்கள் உள்ளுர் மற்றும் சிட்னி, மெல்பர்னிலிருந்தும் வந்திருந்து சிறப்புறச் செய்தனர்.

- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us