சிங்கப்பூரில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம்

அக்டோபர் 16,2019  IST

Comments

சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. தேவி வழிபாட்டு முறைகள் பல இருப்பினும் மக்களுக்கு எளிதில் விரைவாக சகல வித சௌபாக்கியங்களையும் வல்லமையையும் தர வல்லது ஸ்ரீ சண்டிகா தேவியின் வழிபாடாகும். தேவி மகாத்மியம் அல்லது ஸப்தசதீ எனும் நூலில் அம்பிகையின் பராக்கிரமங்களைப் போற்றுகின்ற 700 ஸ்லோகங்களை 700 மந்திரங்களாகப் பாராயணம் செய்வதே தேவி மகாத்மியப் பாராயணம். தேவி மகாத்மியப் பாராயணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோமங்களில் 9 முறை பாராயணம் செய்து ஒரு முறை ஹோமம் செய்தால் அது நவ சண்டி யாகம். அதே போல் 100 முறை பாராயணம் செய்து பத்து முறை ஹோமம் செய்தால் அது சதசண்டி மஹா யாகம். இந்த வகையிலேயே அருள்மிகு வீர மாகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. செப்டம்பர் 28 ஆம் தேதி காலை அநுக்ஞை – விக்னேஸ்வர பூஜை – ஸ்ரீ மகா கணபதி ஹோமம் – விசேஷ அபிஷேகம் – பிரம்மச்சாரி பூஜை ஆகியவை நடைபெற்று பூர்ணாஹீதி – மகா தீபாராதனையுடன் தொடங்கியது. மாலையில் ஸ்ரீ சண்டிகா தேவி கலச ஸ்தாபனம் – யாக சாலை பூஜைகள் – ஸ்ரீ சண்டிகா தேவி ஆவாஹணம் – ஸ்ரீ தேவி மஹாத்மியப் பாராயணம் தீபாராதனையுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்து தொடர்ந்து அக்டோபர் 8 வரை நடைபெற்றது.

அக்டோபர் எட்டாம் தேதி சுவாசினி பூஜை – கன்யா பூஜை – வடுக பூஜை – சௌபாக்ய த்ரவ்ய ஹோமங்கள் – வஸ்திர சமர்ப்பணம் – வசோத்தாரை மஹா பூர்ணாஹீதி – தீபாராதனை நடைபெற்று யாக சாலையிலிருந்து ஸ்ரீ மஹா சண்டியாக கும்பங்கள் ஆலயம் வலம் வந்து ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்களின் “ ஓம் சக்தி “ முழக்கம் மெய்சிலிர்க்க வைத்தது. அம்பிகை யாகசாலையில் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகும் இந்தப் பகுதி முழுவதும் தெய்விக மணம் கமழ மஹா சண்டி யாகம் நிறைவு பெற்று திரளாகப் பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)