இந்திய- மாலத்தீவு வர்த்தக கண்காட்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்திய- மாலத்தீவு வர்த்தக கண்காட்சி

அக்டோபர் 18,2019  IST

Comments

 

மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேயில் இந்திய- மாலத்தீவு வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.

மாலத்தீவில் இந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்திய- மாலத்தீவு நட்புறவு சங்கம் இந்த வர்த்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமத் சாலி, மாலத்தீவுக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வர்த்தக கண்காட்சியில், இந்திய- மாலத்தீவு நட்புறவு சங்க அரங்கிற்கு வந்து, சங்கத்தின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவல் அதிபர் அலுவலக இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.


மாலத்தீவில் இந்திய வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய பார்லிமெண்ட் சபாநாயகருமான முகமது நஷீத் இந்த அரங்கிற்கு வந்தார். அமைச்சர் மாலி ஜமால் உட்பட பல அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் வர்த்தக கண்காட்சியைப் பார்வையிட்டனர்.



இந்த வர்த்தக கண்காட்சிக்கு வந்த பொதுமக்களிடம், “பொது இடங்களில் புகை பிடிப்பதை எதிர்க்கிறேன்” என்ற உறுதி மொழியில் இந்திய- மாலத்தீவு நட்புறவு  சங்கத்தின் சார்பில் கையெழுத்து வாங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் ஹிம்மத் ஹுசைன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us