சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் மலர் வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் மலர் வெளியீடு

அக்டோபர் 21,2019  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – சிங்கப்பூரின் 200 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தினை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் 200 பேரின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு மலரை வெளியிட்டு புதிய வரலாறு படைக்கு முகமாக நடத்தியது.. அக்டோபர் 19 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் ரோஷன் பரத்வாஜ் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய இவ்விழா சிங்கப்பூரின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து புதிய வரலாறு படைக்கின்ற விழாவாக அமைந்தது. இந்நூல் தமிழவேள் கோ.சாரங்கபாணி முதல் இன்றைய எழுத்தாளர் வரையுள்ளவர்களின் படைப்புக்கள், பணியின் வரலாறு, விருதுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவரவர் படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டு பணியாற்றி புதிய அத்தியாயங்கள் பல படைத்து பொலிவும் வலிவும் தோற்றுவித்த நா.ஆண்டியப்பன் இவ்வற்புதமான வரலாற்றுப் பெட்டகத்தை உருவாக்கியுள்ளார்.

விழாவில் திரையிடப்பட்ட காணொளி சிங்கப்பூரின் வரலாற்று நாயகர்கள் சங் நீல உத்தமன், சர்.ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ், முன்ஷி அப்துல்லா, டான் டாம் செங், நாராயண பிள்ளை போன்றோரின் சிறப்புக்கள், அன்றைய சிங்கப்பூர் இன்றைய நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தந்தை லீ குவான் இயூ தொலைநோக்குச் சிந்தனைகள் முதலியவைகள் பற்றிய காட்சிகளைக் கொண்டிருந்தது.

சிங்கப்பூரின் வட்டாரங்கள் ஒவ்வொன்றும் எப்படி இருந்தன, எவ்வாறு மாறின, எத்தகு வளர்ச்சி கண்டன, அந்தந்த வட்டாரங்களில் வாழ்ந்த தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் போன்றவற்றைத் தங்கள் பார்வையில் எட்டு இளையர் “சிங்கப்பூரின் வரலாற்றுச் சுவடுகள்' என்ற தலைப்பில் படைத்தனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன் செம்பவாங், உட்லண்ட்ஸ், ஈசூன் பற்றியும் வெள்ளி நிலா அங் மோ கியோ, செங்காங், பொங்கோல் பற்றியும் செல்வி சர்மிளி செல்வராஜ் சிராங்கூன் ஹவ்காங் பற்றியும் மற்றும் ஹர்ஸித்தா, சுப்பு அடைக்கலவன், கல்யாணி, ஹரிணி, ரேவதி ஆகியோர் மற்ற பகுதிகளைப் பற்றியும் எடுத்துரைத்த செய்திகள் வியப்பிலாழ்த்தின.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உரை நிகழ்த்தியது, டாக்டர் வீராசாமியின் சேவை, இந்து முஸ்லிம் வழிபாட்டு ஒருங்கிணைப்பு ஆலயமாக விளங்கிய ஈயமலை ஆலயம் – பெரியார் ஈ.வே.ரா மற்றும் பொதுவுடைமைத் தலைவர் ஜீவா பெயரில் அமைந்த தமிழ்ப் பள்ளிகள் - கல்வெட்டுச் செய்திகள் – ஜப்பானிய ஆட்சி – மக்கள் செயல் கட்சி உதயம் போன்ற எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளை இவ்விளையர் ஆய்வுக் கட்டுரையில் சமர்ப்பித்து அசத்தினர். விழாவின் சிறப்பு விருந்தினராக இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன் கலந்து கொண்டு மலர் உருவாக்கத்தையும் இளையோரின் படைப்புக்களையும் பாராட்டி வாழ்த்தி மலரை வெளியிட்டார்.

புரவலர்கள் ஜோதி மாணிக்க வாசகம், ஆனந்தபவன் உணவக உரிமையாளர் பானுமதி ராமச்சந்திரா, முஸ்தபா உள்ளிட்டோரும் மூத்த எழுத்தாளர்கள் தமிழறிஞர் சுப. திண்ணப்பன், மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன், தனித்தமிழ் ஆர்வலர் கவிஞர் இளமாறன், தமிழ் இலக்கியக் களத்தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் உள்ளிட்டோரும் பெற்றுக் கொள்ள பலத்த கரவொலிக்கிடையே மலர் வெளியீட கண்டது. மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற விவாத அரங்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளிவந்தன.

சுருங்கக் கூறின் சிங்கப்பூர் பற்றிய இதுவரை வெளிவராத பல தகவல்களை சிங்கப்பூரர்கள் அறிந்து கொள்ளும் “ புதைபொருள் ஆய்வகக் களஞ்சியமாக “ இவ்விழா அமைந்தது எனலாம். விழாவிற்கு கழகத்தலைவர் சுப.அருணாசலம் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் நா.ஆண்டியப்பன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் கிருத்திகா நன்றி நவில விழா நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us