சிங்கப்பூரில் தீ மிதித் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தீ மிதித் திருவிழா

அக்டோபர் 22,2019  IST

Comments

தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் சிங்கப்பூரின் மரபுடைமைச் சின்னமாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டதுமான சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி தீ மிதித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா சிங்கப்பூரில் பிரபலமானது. ஒரு மாத காலம் பாரதக் கதை உபன்யாசிக்கப்பட்டது . அறவான் களப் பலி தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. தீ மிதி நாளில் தலைமைப் பண்டாரம் கண்கவர் அலங்காரப் பூக்கரகத்தைச் சிரமேல் தாங்கி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மண்டபத்தில் பக்திப் பெருக்கோடு தாண்டவமாடியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

அங்கிருந்து தெய்விக நாதஸ்வரம் முழங்க – பக்தர்கள் பாமாலை இசைக்க ஸ்ரீ மாரியம்மன் கோவில் வந்தடைந்தார். ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் அம்மனே இறங்குவது போல் பக்தர்கள் “ ஓம் சக்தி “ சரண கோஷமிட்டனர். தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தப் பெருமக்கள் விரதமிருந்து பயபக்தியோடு குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது. சர்வ அலங்கார நாயகியாக அம்பிகை வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

அப்பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் ஆங்காங்கே பந்தல் அமைத்து வரிசை சமர்ப்பித்து வழிபட்டனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

Advertisement
Advertisement
Advertisement

நித்யானந்தா பாஸ்போர்ட் இல்லை: போலீஸ்

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தைகளை மீட்டனர். ...

நவம்பர் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)