ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் தீபாவளி கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் தீபாவளி கொண்டாட்டம்

அக்டோபர் 26,2019  IST

Comments

கான்பெர்ரா: இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தியத் தீப ஒளி திருவிழா, தீபாவளி. தீபாவளி என்பது, தீமைக்கு எதிராக நன்மையும், இருளுக்கு எதிராக ஒளியும், அறியாமைக்கு எதிராக அறிவும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் திருவிழா; தீபங்களின் வரிசை. இந்த அற்புதமான திருவிழா குறித்து பல்வேறு புராண கதைகள் உலாவினாலும், தற்போது இந்த தீபத் திருவிழா, நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக, நட்புறவை புதுப்பித்து பலப்படுத்துவதாக, அமைதியையும், இணக்கத்தையும் பரப்புவதாக, எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையின் எளிமையான மகிழ்ச்சியாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய பெடரல் பார்லிமெண்டின் கிரேட் ஹாலில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. சந்தோஷ் குப்தாவும், ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் உறுப்பினர்களும் இதற்கான ஏர்பாடுகளைச் செய்திருந்தனர். 

பிரதமர் ஸ்காட் மாரிசன், எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பான்ஸ் மற்றும் இதர அமைச்சர்கள், எம்.பி.,களை ஆஸ்திரேலிய இந்து கவுன்சிலின் தேசியத் தலைவர் பிரகாஷ் மேத்தா வரவேற்றார்.

இந்திய தூதர் ( பொறுப்பு) கார்த்திகேயன், பொருளாளர் ஜோஸ் கிரிடென்பெர்க், இதர எம்.பி.,கள், குறிப்பாக அமைச்சர்கள் ஆலன் டட்ஜ், குடியேற்ற மற்றும் பல்வகைகலாச்சாரத் துறை அமைச்சர் டேவிட் கோலமன் மற்றும் இதர அரசியல் சகாக்களையும், தலைமை விருந்தினரான பிரதமர் வரவேற்றார்.

விழாவில் பிரதமர் பேசுகையில், “சுவையான கரம் மசாலா கலவையைப் போல் ஆஸ்திரேலிய பல்வகை கலாச்சாரம் அமைந்துள்ளது. இதை நான் மிகவும் விரும்புகிறேன். இந்த ஆஸ்திரேலிய பல்வகை கலாச்சாரத்திற்கு பல உதாரணங்கள் கூறப்பட்டபோதும், கரம் மசாலா என்ற உதாரணத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

“ நீங்கள் இந்த கலவையில் எதாக ஒன்றாகவும் இருக்கலாம்; அதைப் பற்றி கவலை இல்லை. தனியாக நல்ல சுவை இல்லாததாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றாக சேரும்போது அதன் சுவையே மகத்தானது. அத்தகைய மணம்தான் ஆஸ்திரேலிய பல்வகை கலாச்சாரத்தில் எழுகிறது.

“இந்த கிரேட் ஹாலில் எத்தனையோ சிறந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன; ஆனால் இவ்வாறு அனைத்து சமூகத்தினரும் ஒன்று கூடி நடத்தும் நிகழ்வுதான் மிகச் சிறந்த நிகழ்வாகும். தீமைக்கு எதிராக நன்மையும், இருளுக்கு எதிராக ஒளியும், அறியாமைக்கு எதிராக அறிவும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் இந்த 2 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான திருவிழாவில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோருடன் நாம் இங்கு இணைந்திருக்கிறோம்.

“ தற்போது 7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவை தங்கள் வீடாக கருதி உள்ளனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா; ஜனநாயகத்தின் கலங்கரை விளக்காக அது திகழ்கிறது. ஒரு வலுவான ஜன்நாயக அடித்தளத்தில், பிரமிக்கத்தக்க வலுவான பொருளாதாரம் அங்கு கட்டப்பட்டு வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

விழா நிறைவில் அனைவருக்கும் சந்தோஷ் குப்தா நன்றி கூறினார். 60க்கும் மேற்பட்ட பார்லிமெண்ட் உறுப்பினர்களும் 500க்கும் மேற்பட்ட இந்தியர்க்ளும் இதில் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us