தீபத்திருநாளில் கத்தார் ரஜினி மக்கள் மன்றம் 'அன்னதானம்' - | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தீபத்திருநாளில் கத்தார் ரஜினி மக்கள் மன்றம் 'அன்னதானம்' -

அக்டோபர் 29,2019  IST

Comments

கத்தார் ரஜினி மக்கள் மன்றம், தீபாவளியை முன்னிட்டு, சென்னை 'சிவானந்த சரஸ்வதி சேவை ஆசிரமத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் முதியவர்களுக்கு இனிப்புடன் கூடிய சிற்றுண்டி வழங்கியது. காலையில், சேவை இல்லத்தில் கூடியிருந்த பிள்ளைகளும், முதியவர்களும் தீபாவளி வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு மகிழ்வோடு ரஜினிக்கும், கத்தார் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் தீபாவளி வாழ்த்து கூறினர். கரும்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவேற்பையும் வாழ்த்துகளையும் வண்ண வார்த்தைகளால் எழுதி அலங்கரித்திருந்தனர்.

தொடர்ந்து ரஜினி நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென இறைவனை வேண்டி, சேவை இல்லத்தின் நிர்வாகிகள், குழந்தைகள், மூத்தோர் என அன்பு அத்தனை பேரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் தீபாவளி இனிப்பு பலகாரம் கொண்ட சிறப்பு சிற்றுண்டியை சுமார் நானூறு பேர் உண்டு மகிழ்ந்து நன்றி கூறியது, நெகிழ்வான தருணமாக இருந்தது. 'நன்று செய்தோம், தீபாவளி அன்றும் செய்தோம், என்றும் செய்வோம்' என கத்தார் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருமிதம் மட்டும் கொள்ளாமல் அடுத்தடுத்து பல சமூக நல உதவிகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது, பாராட்டத் தகுந்தது.



- தினமலர் வாசகர் எஸ்.சிவசங்கர்



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us