மெல்போர்னில் உலக மனநல விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மெல்போர்னில் உலக மனநல விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி

அக்டோபர் 29,2019  IST

Comments

 

அக்டோபர் 10 ஆம் தேதி மன நல நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்தே மன நல வாரம் கொண்டாடப்பட்டது. இதில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடியவர்கள், மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர்! இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களிடையே மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் உதவி அளிக்கவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஒருவர் உளரீதியாக மட்டும் அல்ல, சமூக அக்கறை மற்றும் நல்ல அற உணர்வுகளுடனும் இருந்தால்தான் அவர் நல்ல மன நலத்துடன் இருக்கின்றார் என்று அர்த்தம். இதைச் சொல்வது உலக சுகாதார நிறுவனம். குழந்தைப்பருவத்தில் இருந்தே மன நலம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 12ம் தேதி மெல்போர்ன் டாண்டினாங் ட்ரம் திரையரங்கில் “அன்று முதல் இன்று வரை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆஸ்திரேலிய மன நல அறக்கட்டளையின் தலைவர் ஜிம் கூடின் மற்றும் அதன் துணைத்தலைவர் வாசன் சீனிவாசனும், உள்ளூர் முக்கியப் பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தனர். இதைத் தொடர்ந்து கமல் ரசிகர் மன்றத்தினர் ஆஸ்திரேலிய மன நல அறக்கட்டளையின் முன்முயற்சிகளுக்கு நிதி உதவி செய்வதற்கான காசோலையை வழங்கியது.

ஒத்த எண்ணங்களைக் கொண்ட தன்னார்வலர்களால் ஆஸ்திரேலியாவில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம், குறிப்பாக வீடற்றவர்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை வழங்குவது போன்ற தொண்டுகளை செய்வதன் மூலம் சமூகத்திற்கு முடிந்தவரை திருப்பித் தருவதில் கவனம் செலுத்துகிறது. இதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு, இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

டாக்டர் கமல்ஹாசனின் பெயரில் செயல்பட்டு வரும் இந்த நற்பணி மன்றம், உலக நாயகனின் திரைப்படத் துறையில் 60 ஆண்டுகால கலையுலக சாதனைகள் குறித்து ஒரு காணொளியையும் திரையிட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். வளர்ந்து வரும் கலைஞர்களான பம்பா பாக்யா மற்றும் அபர்ணா நாராயணன் இருவரும் உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து ஒரு சிறப்பான இசை விருந்தை ரசிகர்களுக்கு அளித்தனர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்காகவே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களை ஒருங்கிணைத்து ஒரு சமூக அக்கறை கொண்ட செயலை முன்னெடுத்துச் செல்ல வைத்திருக்கின்றது என்பதே உண்மை.

- நமது செய்தியாளர் இளங்கோ.கே.ஆர்.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)