அமெரிக்காவின் 'ஹாலோவீன் டே’ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவின் 'ஹாலோவீன் டே’

நவம்பர் 01,2019  IST

Comments

 

அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மாலை வேளை- கருப்பு உடுப்புகளில் விதவிதமான சூனியக்காரிகள், குலைநடுங்கும் எலும்புக்கூடுகள், கதிகலங்கச் செய்யும் உருவங்களில் மந்திரவாதிகள், நீண்ட கூர்மையான பற்களுடன் விகாரமான முகங்கள், ரத்தம் செட்டப் சொட்ட நடமாடும் மண்டையோட்டு மனிதர்கள் !

என்ன பயந்துவிட்டீர்களா? அன்று 'ஹாலோவீன் டே'. அமெரிக்கா முழுவதும் அப்படித் தான் இருக்கும். அதாவது நவம்பர் 1 ஆம் தேதி, ‘ஆல் ஹாலோஸ் தினத்தின்’ (ஆல் செயிண்ட்ஸ் அல்லது ஹாலோவ்மாஸ் என்றும் அழைக்கப்படுகிறது) கிறிஸ்தவ புனித நாட்களுக்கும், நவம்பர் 2 ஆம் தேதி ‘ஆல் சோல்ஸ் தினத்திற்கும்’ முந்தைய மாலை ஹாலோவீன் ஆகும், இதனால் அக்டோபர் 31 அன்று விடுமுறை தினத்தை ‘ஆல் ஹாலோஸ் ' ஈவ்’ (ஆல் ஹாலோஸ் தினத்திற்கு முந்தைய மாலை) என்று பொருள்.

இத்தினம் இறந்தவர்களின் ஆன்மாவை திருப்திப் படுத்த வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இத்தினத்தை சோகமானதாய் ஆக்காமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேலே சொன்னதை போல பேய் மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி அவ்வாறு கெட் அப்களில் வந்து எல்லோர் வீடுகளிலும் இருந்து,'ட்ரிக் ஆர் ட்ரீட்' எனக்கூறி சாக்லேட்கள் பெற்றுச் செல்வர். வெகு சிலர் இதனை விரும்பி செய்வதில்லை என்றாலும்,வீடு தேடி வரும் குழந்தைகளை ஏமாற்ற விரும்பாமல், நிறைய சாக்லேட்கள் வாங்கி வைத்து காத்திருந்து கொடுப்பார்கள்.

இந்த காஸ்ட்யூம்களுக்கென்றே பிரத்யேக கடைகளும் பல உண்டு. குழந்தைகள் பள்ளியிலேயே நண்பர்களுடன் பேசிவைத்துக் கொண்டு அதே போல வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்பர்.

அமெரிக்காவின் வடபகுதிகளில் மிகுந்த குளிர் பரவிய மாதம் தான், தென்பகுதியில் குளிர் ஆரம்பித்துள்ள காலம். ஆனாலும் ஸ்வட்டர்களும் ஜாக்கெட்களும், கை உறைகளும், மஃப்ளர்களும் அணிந்தாவது வீடு வீடாய்ச் சென்று சாக்லேட்கள் பெற்று அன்றைய இரவை கொண்டாட்டமாய் கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இது ஓர் வித்தியாசமான சிறுவர்கள் விரும்பி எதிர்பார்க்கும் தினமாகவே இருக்கும்.


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us