ரிச்மாண்ட் கோயிலில் கந்த சஷ்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரிச்மாண்ட் கோயிலில் கந்த சஷ்டி

நவம்பர் 02,2019  IST

Comments

  ரிச்மாண்ட்: அமெரிக்கா, ரிச்மாண்ட் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கிய இந்த விழா, நவம்பர் 2 ஆம் தேதி சூர சம்ஹாரத்துடன் நிறைவு பெற்றது.



விழா துவங்குவதற்கு முதல் நாள் கோயிலில் ஒரு பகுதியில் ஒரு குன்று போல் ஏராளமான மரங்களுடன் அமைக்கப்பட்டு, குன்றின் உச்சியில் முருகன் சிலை வைக்கப்பட்டிருந்தது. கந்த புராணத்தின் பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.



வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகன், மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் வீற்றிருந்தார்.

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஒரு உபயதார்ர் பொறுப்பேற்றிருந்தனர். 

உபயதார்ர்களிடம் அர்ச்சகர் சங்கல்பம் பெற்றபின் விழா துவங்கியது. பின்னர்முருகப் பெருமானுக்கு பூஜை செய்த அர்ச்சகர், நாமாவளி பாராயணம் செய்தார்.

உற்சவர் தேர் கோயில் பிரகாரத்தை வலம் வந்தது. “ கந்தனுக்கு அரோகரா”, “முருகனுக்கு அரோகரா” என்று கோஷமிட்டவாறு  தேரைப்  பக்தர்கள் பின்தொடர்ந்தனர். இந்த முழக்கத்தால் உருவான தெய்வீக உணர்வை அங்கு இருந்த அனைவரும் உணர்ந்தனர்.

கந்த சஷ்டி கவசம் மற்றும் முருகப் பெருமானின் பக்திப் பாடல்களைப் பக்தர்கள் பாடினர்.

பக்தர்கள் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு அர்ச்சகர் பிரசாதம் தயாரித்து அதை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்தார்.

 நாத விந்து கலாதி நமோ நம 

வேத மந்திர சொரூபா நமோ நம

ஞான பண்டித சுவாமி நமோ நம”

என்ற திருப்புகழ் பாடலுடன் விழா நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







- தினமலர் வாசகர் நடராஜ மூர்த்தி




Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us