துபாயில் இந்திய வர்த்தகர்களுக்கு விருது வழங்கும் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் இந்திய வர்த்தகர்களுக்கு விருது வழங்கும் விழா

நவம்பர் 03,2019  IST

Comments

துபாய் : துபாயில் சிறப்பான வகையில் வர்த்தகம் செய்து வரும் இந்திய வர்த்தகர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி கலந்து கொண்டார்.

துபாய் முத்தமிழ்ச் சங்கம், எஸ்.வி.கே. மீடியா ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வகையில் வர்த்தகம் செய்து வரும் இந்திய வர்த்தகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ச் சங்க தலைவர் கே. மோகன் தலைமை வகித்தார். எஸ்.வி.கே. மீடியா நிறுவனத்தின் எஸ். வசந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் சிறப்பான வகையில் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி மொரிஷியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இந்த விழாவில் தமிழக பிரமுகர் வி.ஆர்.எஸ். சம்பத், நக்கீரன் கோபால், வர்த்தக பேரவையின் தலைவர் பரஸ் சகத்பூரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில் வர்த்தக பிரமுகர் ஆபித் ஜுனைத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரியா மற்றும் மோனிசா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us