ஆக்லாந்தில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசம்

நவம்பர் 05,2019  IST

Comments

ஆக்லாந்தில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு வரமாக அமைந்தது சென்ற வெள்ளி. சனி ஞாயிறு நாட்களாகும். ஆம் சராணாகதி அமைப்பினர் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்திற்கு மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சனியும் ஞாயிறும் காலையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (நவம்பர் 1,2 மற்றும் 3 தேதிகளில்) மாலை 7 மணி முதல் 9. மணிவரை ராயல் ஓக்கில் அமைந்துள்ள பிக்ளிங் சென்டரில் ஸ்வாமிகளின் உபன்யாசம் நடந்தது.

ஸ்வாமிகள் அவர்கள் உபன்யாசத்திற்கு எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிகவும் பொருள் நிறைந்தது எனலாம். அதாவது வெள்ளியன்று 'நாம் ஏன் பிறந்தோம்? என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதில் அவர் நாம் ஏன் பிறந்தோம்? அதற்குண்டான காரணங்கள், அதன் விளைவுகள், சுகமும் துக்கமும், சந்தோஷமும் வலியும் எல்லாம் அவரவர் செய்த புண்ய பாவ பலன்களை ஒட்டியே ஏற்படுவது என்று மேற்கோளுடன் எடுத்துரைத்தார். இவையாவும் கர்மாவை சார்ந்தே ஏற்படுவதாகும். சொர்க்கம் , சந்திர லோகம், நாக லோகம் இவற்றை அடைவதெல்லாம் சிறிய அளவான சந்தோஷங்கள்தான்.. ஸ்ரீவைகுண்டத்தை அடைய முயற்சிப்பது தான் நிறைந்த மகிழ்ச்சியை தரவல்லது. அதற்கு இறைவனை முழுமையாக சரணாகதி அடைந்தால் தான் அது கிட்டும் என்பதை மேலான கருத்துக்களை கொண்டு மிக அழாகாக எடுத்துரைத்தார். அவர் மேலும் ஆத்மா வேறு உடல் வேறு என்பதை நிறைய உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். ஆத்மா அழிவில்லாதது. மேலும் பிறப்பும் கர்மாவும் அழிவில்லாதது. ஒவ்வொருவர் செய்யும் கர்மத்தின் பலன்தான் அவர்களின் பிறப்பு. அது பிரம்மத்தின் அடிப்படையில் நடக்கிறது. முழுமையான சரணாகதி மூலம் இப்பிறவியை இறுதியாகி கொள்ளலாம் என்றும் கூறினார்.


சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணிக்கு பல்மொரல் அரங்கத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்களும் காலையில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் ராமனையும் கண்ணனையும் போற்றி பாடியதை அழகாக விவரித்தார். திருப்பாவை 4, 12 மற்றும் 13 வது திருப்பாவைகளில் ஆண்டாள் ராமனை போற்றி பாடியதை விவரித்தார். ஞாயிறன்று திருப்ப்பாவையின் மற்ற பாடல்களில் கண்ணனின் லீலைகளை ஆண்டாள் அழகாக பாடியுள்ளதை எடுத்துக்காட்டினார். கண்ணனின் லீலைகளை கேட்க கேட்க உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குவதை உணரலாம்.

சனியன்று மாலை அத்திகிரி வரதர் வந்தார் என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. அவர் அத்தியூர் என்ற கோவில் நகரமான காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார். சிலா ரூபத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் நாற்பது வருடத்திற்கு ஒருமுறை அவர் வெளிவரும் காரணங்கள் பலவற்றை கூறினார். அத்திமரத்தை கொண்டு உருவாகும் அத்திகிரி பெருமாளின் சிறப்பையும் அப்பெயருக்குண்டான காரணங்களையும் கூறினார்.

ஞாயிறு மாலை நியூஸிலாந்தில் வாழும் இந்துக்களின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைத்தார். ஒவ்வொருவரும் அவர்களுடைய நித்யகர்மானுஷ்டங்களை விடமால் பின்பற்றவேண்டும் என்று கூறினார். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்களை பற்றியும் இறை வழிபாடு பற்றியும் சிறப்பாக உபன்யாசம் செய்தார்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் இந்த மூன்று நாட்கள் நடந்த உபன்யாசத்தை கேட்ட எல்லோரும் நிச்சயமாக அவர் இந்த நூற்றாண்டின் ஆழ்வாராகவே கருதினார்கள் என்றால் மிகையாகாது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீ சுந்தர், ஸ்ரீ பத்ரி நாராயணன். ஸ்ரீ ரகு மற்றும் ஸ்ரீ ஸ்ரீராம் ஆகியோர் உபன்யாசத்தை கேட்டு மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி கூறினார்கள். ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us