பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா

நவம்பர் 04,2019  IST

Comments

பிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப்பள்ளியின் 8-வது ஆண்டு விழா கடந்த 19 அக்டோபர் 2019, சனிக்கிழமை, ஆஃகாசியா ரிட்ஜ் அரசுப் பள்ளி கலையரங்கில் சிறப்பாகநடைபெற்றது. வழமை போல் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கேற்றலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில், பள்ளியின் மூன்று வளாக மாணவ-மாணவியர்களின் நடனங்கள், நாடகங்கள், சிலம்பாட்டம் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

‘கீழடி’, ‘மொழிப் பிரச்சனை’ மற்றும் ‘ஜியோ-வின் ஆதிக்கம்’ போன்ற இந்தியாவின் நாட்டு நடப்புச் செய்திகள், நடனத்திலும் நாடகத்திலும் பாடல்களாகவும், வசனங்களாகவும் இடம்பெற்றன. மேற்பிரிவு மாணவ மாணவியரைக் கொண்டு சங்கர் ஜெயபாண்டியன் மற்றும் துரை இயக்கியமைத்த நாடகம், அனைவரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ஆடல்-பாடல் என்று நின்று விடாமல், மாணவ-மாணவியரை நாடகத்தில் ஈடுபடுத்தி தங்கு தடையின்றி தமிழில் உரையாடச் செய்தது ஒரு அரிய முயற்சி.

பாரதியார் பாடல்களுக்கு, டைகம் பள்ளி மாணவ-மாணவியரின் நடனங்கள்; சிலம்பாட்டத்தில் மாணவியரின் பங்களிப்பு, ‘உலகம் சமநிலை பெறவேண்டும்’ என்ற தத்துவப் பாடலுடன் பெற்றோரைப் பேணுதுலின் சிறப்பு குறித்த நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவ-மாணவியர்களின் திறமையையும், நிகழ்ச்சிக்களைத் தயாரித்து வழங்கியவர்களின் அரிய முயற்சிகளையும் வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சியில், தமிழ்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்துவழங்கியவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.


- நமது செய்தியாளர் ஆசோ. ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)