லேகோஸில் ஶ்ரீ கந்த சஷ்டி மஹோத்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸில் ஶ்ரீ கந்த சஷ்டி மஹோத்சவம்

நவம்பர் 04,2019  IST

Comments

லேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தீபாவளி முடிந்த அடுத்த நாளிலிருந்து கந்த சஷ்டி பெருவிழா ஆரம்பமானது. ஒரு வாரம் முழுவதும் முருகன் அருளால் அவன் புகழ் பாடப்பட்டது. விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

முதல் நாள்: ஸஹஸ்ரநாம அர்ச்சனை, பாலமுருகன் அலங்காரம்

இரண்டாம் நாள்: சத்ரு சம்ஹார திரிசிதி அர்ச்சனை,ஆறுமுகன் அலங்காரம்

மூன்றாம் நாள்: சண்முகா அர்ச்சனை, பழனி ஆண்டவர் அவங்காரம்

நான்காம் நாள்: சுப்பிரமணிய திரிசதை அர்ச்சனை, வள்ளிமணவாளன் உற்ற வயோதிக அலங்காரம்

ஐந்தாம் நாள்: ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ராஜ அலங்காரம்

ஆறாம் நாள்: கந்தன் அஷ்டோத்திரம், சூரசம்ஹாரம் அலங்காரம்

ஒவ்வொரு நாளும் ஆறு முறை சஷ்டி கவசம் மற்றும் ஒருமுறை ஸ்கந்த குரு கவசம் பாடப்பட்டது.

நவம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் இனிதே அரங்கேறியது. மாலைகள், தோரணம், ஊஞ்சல், சீர் வரிசை, கல்யாணம் என விமர்சையாக வள்ளி தேவசேனை சமேதமாக சுவாமி காட்சி அளித்து 300க்கும் மேற்பட்ட ஹருதயத்தில் நீங்காது நிலைத்திருக்க அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் வாழை இலையில் விருந்தும் பரிமாரப்பட்டது.

முக்திக்கு வித்தான முருகன் புகழ் பாடி அவன் அருளில் திளைத்தனர் லேகோஸ் வாழ் தமிழ் மக்கள்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us