சிங்கப்பூரில் சூர சம்ஹார கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சூர சம்ஹார கோலாகலம்

நவம்பர் 04,2019  IST

Comments

சிங்கப்பூர் ஆலயங்களில் கந்த சஷ்டிப் பெரு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திதிகளில் முருகப் பெருமானுக்கு உகந்தது சஷ்டி திதி. ஐப்பசி மாதத்தில் வரும் வளர் பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடைபெறும் போர்தான் சூர சம்ஹாரம். ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பூரண கும்பம் வைத்து விசேஷ அபிஷேகம் – அலங்காரம் – ஆராதனை – சண்முகார்ச்சனை – பக்தர்கள் பங்கேற்ற கந்த சஷ்டி கவச பாராயணம் முதலியவை கண்கொள்ளாக் காட்சிகளாக அமைந்தன.

அஞ்சும் முகம் தோன்றும்போது இந்த ஆறுமுகத்தை தியானித்தால் அனைத்துக் குறைகளும் பறந்தோட முருகப் பெருமான் அருள்பாலிப்பார். ஐந்தாம் நாள் அம்பிகையிடமிருந்து அனைத்து சக்திகளும் நிறைந்த வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சியாக நவம்பர் 2 ஆம் தேதி சூர சம்ஹாரம் பெருந் திரளான பக்தப் பெருமக்கள் திரண்டிருக்க நடைபெற்றது. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுள் முகுந்தன் – அழிக்கும் சக்தியான ருத்ரன் – படைக்கும் சக்தியான கமலோத்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். சர்வ அலங்கார நாயகராக கந்த வேல் – பக்தர்களின் “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா “ என்ற கோஷம் முழங்க சூரனை வதைக்கச் சென்ற காட்சி அற்புதம்.

சிங்க முகாசுரன் – கஜமுகாசுரன் – சுயரூபமான சூரபத்மனாக வந்த காட்சியும் இறுதியில் சேவலாக எதிர்த்த காட்சியும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது அருமையிலும் அருமை. வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. ஒரு பாதி மயிலாகவும் மறுபாதி சேவலாகவும் மாற்றி முருகப் பெருமான் சூரபத்மனுக்கு அபயமளித்து அருள்பாலித்து தமது வாகனமாகவும் கொடிச் சின்னமாகவும் ஏற்றுக்கொணடார். சிங்கப்பூரின் மூத்த சிவாச்சாரியார் பாலச்சந்திர சிவாச்சாரியார் கந்த சஷ்டி மகிமை பற்றியும் சஷ்டி விரத முறை – மேன்மை பற்றியும் பக்தர்களுக்கு விளக்கினார்.

சூர சம்ஹாரத்திற்குப் பிறகு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய பழனிப் பஞ்சாமிர்த அபிஷேகம் மூலவருக்கு நடைபெற்றது மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வாகும். சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் நேரில் வந்து வழிபட்டார். அவருக்கு சோமசுந்தர சிவாச்சாரியார் பிரசாதம் வழங்கி கவுரவித்தார். ஆலய மேலாண்மைக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பங்கேற்ற அனைவருக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us