திறப்பு மற்றும் பகிர்வுக்கான உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க சீனா முயற்சி:ஷிச்சின்பிங் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திறப்பு மற்றும் பகிர்வுக்கான உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க சீனா முயற்சி:ஷிச்சின்பிங்

நவம்பர் 05,2019  IST

Comments

சீனாவின் ஷாங்காய் மாநகரில் சா்வதேச இறக்குமதிக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 6 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:


திறப்பு மற்றும் பகிர்வுக்கான உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும். வளர்ச்சிச் சாதனைகள் மேலதிக நாடுகள் மற்றும் மக்களுக்கு பயன் அளிக்க செய்ய வேண்டும். சந்தைத் திறப்பு அளவை தொடர்ந்து விரிவாக்கி, பல்வேறு நாடுகளின் தரமிக்க பொருட்கள் மற்றும் சேவையின் இறக்குமதி அளவை அதிகரிக்க சீனா முனைப்புடன் செயல்படும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.மேலும், சீனா தொழில் புரிவதற்கான சாதகமான சூழலை தொடர்ச்சியாக மேம்படுத்தி, வெளிநாட்டு முலீடுகளுக்கு சந்தை நுழைவுக் கட்டுப்பாட்டைத் தளர்க்கும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


மேலும், இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவுடன் சேர்ந்து, கம்போடியா, செக் குடியரசு, பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜமைக்கா, ஜோா்டான், கஜகஸ்தான், மலேசியா, பெரு, ரஷியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜாம்பியா ஆகிய நாடுகளும் சிறப்பு அழைபாளர்களாக இதில் கலந்து கொண்டுள்ளன.


சீனச் சந்தையில் இந்திய மருந்துப் பொருள்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், வேளாண் பொருள்கள் ஆகியவற்றுக்கு அதிக தேவை இருப்பதால் இந்தக் கண்காட்சியில் இந்தியா அவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது.


150க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2ஆவது கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. உள்நாட்டு மற்றும்வெளி நாடுகளைச் சேர்ந்த கொள்முதலாளர்களும் தொழில்முறை பார்வையாளர்களும் என மொத்தம் 500000 பேர் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தகவல்: சீன ஊடக குழுமம்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)