சிங்கப்பூரில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மகோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மகோற்சவம்

நவம்பர் 06,2019  IST

Comments

சிங்கப்பூர் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவம் நவம்பர் 3 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டிப் பெரு விழாவை சம்ஹாரத்துடன் நிறைவு செய்யாமல் சுபமாக – அனுக்கிரஹமாக நிறைவு செய்ய ஸ்கந்த சஷ்டிக்குப் பிறகு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது. ஈசூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் முத்திரைத் திருவிழாவாக ஸ்ரீ முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். பக்தப் பெரு மக்களின் திருமண மங்கலப் பொருட்கள் வரிசை ஆலயம் வலம் வந்து சமர்ப்பிக்க – நூற்றுக் கணக்கான தெய்விகத் திருமணங்களை நடத்தி வைத்த பழுத்த அனுபவம் மிக்க சிவாகமப் ப்ரவீண சிங்கப்பூர் மூத்த சிவாச்சாரியார் - பாலச்சந்திர சிவாச்சாரியார் வழி நடத்திட சோமசுந்தர சிவாச்சாரியார் திருமணச்சடங்குகளைச் செய்தார்.


முன்னதாக பாலச்சந்திர சிவாச்சாரியார் இந்து தர்மப்படி நடைபெறும் திருமணச் சடங்குகள் பற்றியும் அதன் உட்பொருள் பற்றியும் விளக்கினார். அஷ்ட லட்சுமிகளையும் அழைத்து சகலவித ஐஸ்வர்யங்களையும் சகலவித சௌபாக்கியங்களையும் வழங்கக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தியது அற்புதம். ரக்க்ஷா பந்தனம் – முருகப் பெருமானுக்குப் பூணூல் அணிவித்தல் – மாலை மாற்றுதல் என ஒவ்வொரு நிகழ்வும் மெய்சிலிர்க்க வைத்தன. ஹோமச் சடங்குகள் நிறைவு பெற்று அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து – பூச்செண்டாடி – கன்னிகா தானத் திருமாங்கல்யதாரணம் நடைபெற்ற போது பக்தப் பெருமக்கள் உணர்ச்சிப் பெருக்கில் “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா “ எனக் கோஷம் எழுப்பியது அடங்க நெடு நேரமாயிற்று.

திருமணம் நிறைவு பெற்றுத் தெய்வத் தம்பதிகளுக்குப் பால் பழம் வழங்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் மங்கல ஆரத்தி எடுத்தனர். தெய்விக நாதஸ்வர இசை திருமண வைபவத்திற்குக் கூடுதல் சுவையூட்டிற்று. பெருந்திரளான பக்தப் பெருமக்கள் திருக் கல்யாண மகோத்சவத்தில் பங்கேற்று - மொய் எழுதி – கல்யாண விருந்துண்டு கந்தனருள் பெற்றுச் சென்றனர். மூத்த சிவாச்சாரியார் அட்சதை கொண்டு எல்லோரையும் ஆசிர்வதித்தது பக்தர்களிடையே பரவசமூட்டியது. ஆலய நிர்வாகக் குழு சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us