அருண் காந்தியுடன் ஓர் அகிம்சையான சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருண் காந்தியுடன் ஓர் அகிம்சையான சந்திப்பு

நவம்பர் 06,2019  IST

Comments

பாரத தேசத்தின் தந்தை மஹாத்மா காந்திஜி அவர்களின் ஐந்தாவது பேரன் திரு அருண் காந்தி அவர்களுடன் பேசக் கிடைத்த வாய்ப்பிற்கு நான் பெருமை கொள்கிறேன்.

சான் ஆண்டோனியோவில் ஒவ்வொரு வருடமும் சிட்டி தீபாவளி எனப்படும் இந்தியாவின் அனைத்து மாநில அமெரிக்கா வாழ் மக்களும் ஒருசேர ஓரிடத்தில் குழுமி தீபாவளியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோன்று இவ்வருடம், கடந்த சனிக்கிழமை நவம்பர் 2 ஆம் தேதி, சிட்டி தீபாவளிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு.அருண் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு டாக்டர் திரு.விஷ் மூலம் கிடைத்தது.


எதிர்பார்த்ததை விடவும் மிக எளிமையாக வரவேற்று அருகில் அமரச் செய்து, காந்திஜியின் வம்சாவளியை சந்திக்கிறேன் எனத் துள்ளிக் குதித்த மனதை, அவரது அமைதியான பேச்சு ஆசுவாசப்படுத்தி நிகழ்வுக்கு என்னைக் கொணர்ந்தது.

காந்திஜியுடன் இருந்த நாட்களை பற்றி வினவினேன். அருண் காந்தி அவர்களின் பேச்சு முழுவதும் காந்திஜியிடம் அவர் சிறுவயதில் கற்றுக்கொண்ட பாடங்களே இருந்தன. நாம் புத்தகங்களில் படித்த அத்தனை விஷயங்களும் அவருக்கு நேரில் கிடைத்தது எத்தனை பாக்கியம் !

‘பேஸிவ் வயலன்ஸ்' எனப்படும் நமக்கே தெரிந்தும் பெரியாமலும் பிறரிடம் காட்டும் கோபம், செயலாற்ற வீரியம் மிகவும் தவறானது என புரிய வைத்ததை அழகாகக் கூறினார். நாம் காட்டும் உடல் வன்முறை எவ்வளவு கொடுமையானதோ, அவ்வளவு தவறானது நாம் காட்டும் கோபமும் ஆத்திரமும்,பழிவாங்கலும். அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என தனக்கு காந்திஜி சொல்லிக்கொடுத்ததாகக் கூறினார்.

தற்போதைய வருடங்களில் அருண் காந்தி உலகமெங்கும் சென்று பள்ளி,கல்லூரிகளில் அகிம்சை முறையின் மகத்துவத்தை தன் தாத்தாவின் வழியை பற்றி பேசிவருகிறார். பல தொழில் நிறுவங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவரைப்பற்றிய குறும்படங்களும் செல்லும் இடங்களில் காட்டப்படுகின்றன. சான் ஆண்டோனியோவைச் சேர்ந்த 'மார்டி' எனும் பெண்மணி அருண் காந்தியை திரைப்படமாக எடுத்துள்ளார். அவரையும் அன்று நான் சந்தித்தேன்.

எனது அடுத்த கேள்வி- அகிம்சை பற்றிய பேச்சுக்களுக்கு வெளிநாட்டு மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் இடையே எத்தகைய வரவேற்பு உள்ளது என்பது தான். மிகவும் உள்ளார்ந்த வரவேற்பும்,புரிந்துகொள்ளும் மனப்பான்மையும் அதிகம் பார்ப்பதாகக் கூறினார். அதில் தான் மிக்க மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

“என் தாத்தா, கோபம் மின்சாரம் போன்றது என்றார். இது மிகவும் சக்திவாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, ஆனால் நாம் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் மட்டுமே. தவறாகப் பயன்படுத்தினால் அது அழிவுகரமானது மற்றும் தவறானது. நாம் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் அது சமூகத்தை மேம்படுத்தும்.'என்றார்.

அடுத்து அவர் மேடையில் ஏற வேண்டும், பலரிடம் பேச வேண்டும் இருந்தாலும் பொறுமையாக என்னிடம் சில மணித்துளிகள் நிதானமாகப் பேசியது -'மேன்மக்கள் மேன்மக்களே' என மீண்டும் மீண்டும் உணர்த்தியது.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)