சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளியின் 'தமிழ்த் தேனீ' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளியின் 'தமிழ்த் தேனீ'

நவம்பர் 06,2019  IST

Comments

பதினான்காம் ஆண்டை தொட்டிருக்கும் சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளி, கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மாணவ-மாணவர்களுக்கு 'தமிழ்த் தேனீ போட்டிகள்' நடத்தினர்.

இதில் நான்கு வயது நிறைவு பெற்ற 'தளிர்' வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலானவர்கள் கலந்து கொண்டனர். வருடம் ஒரு முறை நடக்கும் இப்போட்டி, குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. படங்கள் பார்த்து அவை என்னவென்று சொல்லவும், ஆங்கில வார்த்தைகளை வாசித்து தமிழில் மொழி ஆக்கம் செய்யவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

சற்று பெரிய குழந்தைகள் விடுகதைகள்,பழமொழிகளின் இறுதி வார்த்தையை நடுவர்கள் கூறினால் அவர்கள் முழு வாக்கியத்தையும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 150 வினாடிவினா கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறியதும் வியப்பில் ஆழ்த்துகிறது.

வருடம் முழுதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்ப்பள்ளி வகுப்புகள் நடைபெறுகிறது. பாடத்திட்டங்களோடு இவ்வித போட்டிகள் பலவும் நடத்தும் தன்னார்வலர் பணி புரியும் ஆசிரியர்களை மிகவும் பாராட்ட வேண்டும். இவர்கள் சொல்லிக்கொடுப்பதை பெற்றோர்களும் நல்ல முறையில் பயிற்சி அளித்திருப்பது தெரிந்தது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நம் தாய் மொழி தமிழை நம் அடுத்த தலைமுறை படிக்கவும்,தமிழின் அருமையை புரியவும் வைக்க அரும்பாடு படுவது நமக்கு கடமையுடன் கூடிய பெருமையே !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)