'செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள்
அனைத்தும் செய்ய முடியாதவைகள் என
முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவை தான்'
சாந்தமான, இனிமையான ஓர் முகம். கருப்பு ஃபிரேமில் ஓர் கண்ணாடி. உள்ளிருக்கும் கண்களிலோ அளவுகடந்த ஓர் தேஜஸ்! முகத்தில் இனிமை போதும், உடலில் இனிப்பு வைக்காதீர்கள் என எவரும் முயலாத அக்காலகட்டத்தில் புது சிந்தனை. அதற்கான பலவித முயற்சி,கடின உழைப்பு !
பின்னாளில் கோடிக்கணக்கானோர் உயிர் வாழ பெரும் பாடுபட்ட ஓர் தீர்க்கதரிசி ! இம்மாபெரும் மனிதர் திரு.விஸ்வநாதன் பற்றியும்,அவர் வழிவந்து
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
எனும் குறளுக்கு முழு தகுதி உள்ள அவரது புதல்வர் திரு. விஜய் விஸ்வநாதன் பற்றியும் இக்கட்டுரையில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
டாக்டர் விஸ்வநாதன் அவர்கள், 'நீரிழிவு நோய் தீர்க்கும் மருத்துவ உலகின் தந்தை ' என்றே அழைக்கப்படுகிறார். முதன்முதலில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறைகள் கண்டுபிடித்ததும், அதற்குரிய மருத்துவமனை 1954 ல் அமைத்ததும் டாக்டர் விஸ்வநாதன் அவர்களே ! புகழ் பெற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சம்பளம் இல்லாத 'கௌரவ பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் ஓர் தீர்க்கதரிசி. பின்னாளில் ஏற்படப்போகும் உணவு மாற்றங்களால் மக்கள் சர்க்கரை நோயிலும் அதனை ஒட்டிய சைட் எபெக்ட் எனப்படும் பக்கவிளைவுகளாலும் அவதிப்படப் போவதை எண்ணி, அன்றே நிறைய ஆய்வுகள் செய்து எளிதான புதுமையான மருத்துவ முறைகளை கொண்டு வந்தார்.
கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட பல மாநிலங்களை சேர்ந்த மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தயார் படுத்தியிருக்கிறார். தன்னலமில்லா இவரின் அரும்பணி, மக்களை நீரிழிவு நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றுவதும், கால் பாகங்களுக்கு எவ்வித தீங்கும் நேராதிருப்பதும் தன் மருத்துவத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
தந்தையின் அத்தனை சிறப்பு குணங்களும், அயராத உழைப்பும் டாக்டர் விஜய் விஸ்வநாதன் அவர்களிடமும் அப்படியே குடிகொண்டுள்ளது। இன்று இவர் 'மனிதருள் மாணிக்கமாக' மருத்துவ உலகில் பெரும் புகழோடு கருதப்படுகிறார்
தந்தையின் வழியிலும், தன் முயற்சியிலும் இக்கால எளிதான புதுமையான மருத்துவ முறைகளை பலநாடுகளுக்குச் சென்று ஆராய்ந்து, பற்பல சிறந்த இத்துறை சார்ந்த மருத்துவர்களை சந்தித்து மாநாடுகள் நடத்தி, மருத்துவ உபகரணங்கள் வரவழைத்து, இன்று சென்னை ராயபுரத்தில் 'எம் வி மருத்துவமனை' நீரிழிவு நோயுள்ள மக்களின் நோய்தீர்க்கும் கோவிலாக உள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து ஹைபெர்பேரிக் ஆக்ஸிஜன் தெரபி- எனப்படும் சிறப்பு மருத்துவப்பரிசோதனைக் கருவி வரவழைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் பல முதன்மையான மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவக் கூட்டங்கள் நடத்தியும், அங்கு தன் மருத்துவ கட்டுரைகளையும் பதிவு செய்துள்ளார். சிறப்பாக செயல்படும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களை தமிழ்நாட்டில் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து தன் தந்தையின் பெயரில் பட்டங்களும் தங்கப்பதக்கமும் வழங்குவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார் டாக்டர் விஜய்.
இவர்களது முக்கிய நோக்கமே கிராமப்புற மற்றும் வசதிகள் குறைந்த மக்களின் இந்நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பது தான். வெளி மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் மருத்துவக் கட்டணத்தில் கால் பகுதிக்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.
முதலில் பாதிக்கப்பட்ட நோயாளியை முழுமையாக பரிசோதித்து சிகிச்சையை துவங்குகிறார்கள். ஒரேநாளில் எதுவும் தீர்க்கமுடியாது அல்லவே, அதனால் சில காலநேரங்கள் நிர்ணயித்து வரவழைக்கிறார்கள். படிப்படியாக அவர்களுக்கு மருத்துவ அறிவுரைகளும் சிகிச்சையும் அளித்து அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் சோதனைகள் முடிந்த பின் அவர்கள் பாதங்களுக்குத் தேவையான அளவில் அழகான மருத்துவ பாதணிகள் இந்த மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கென ஓர் பெரிய நிறுவனம் செயல்பட்டு உள்ளுக்குளேயே செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் ஆச்சரித்தக்க வகையில் குறைந்த கட்டணத்தில் மிக ஒப்பற்ற மருத்துவம் . இதுவரை பல லட்சம் நோயாளிகள் நல்லமுறையில் பயனடைந்துள்ளனர்.
ஏற்கனவே உலகப்புகழ் பெற்ற மருத்துவமனையே என்றாலும் இந்தியாவின் தமிழ்நாட்டின் மூலைமுடிக்கில் எல்லாம் உள்ள மக்களுக்கு இவர்களின் மருத்துவமனையும், சேவையும் அறியப்படவேண்டும், மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கமாகும்.
நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதம் சம்பத்தப்பட்ட புண்கள், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை எனில்,விரல்களில் ஆரம்பித்து கணுக்கால் மற்றும் முழங்கால் வரை எடுக்கப்படும் மிகப்பெரிய ஆபத்துநிலைக்குத் தள்ளப்படுவர் என நினைக்கும்போதே பெரும் பயம் ஏற்படுகிறது. கடந்த சில வருடங்களில் தொண்ணூறு சதவிகிதம் கால் பாகங்களை வெட்டியெடுக்கும் நிலை முற்றிலுமாக குறைந்துள்ளது. ஒன்றே ஒன்று நாம் செய்யவேண்டியது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களை அறிவுறுத்தி உடனே மருத்துவமனைக்கு அனுப்பவேண்டியதே.
காப்பாற்ற கடவுள்களாக டாக்டர் விஜய் விஸ்வநாதன் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் சகலவசதிகளுடன் ‘எம் வி மருத்துவமனையும்’ இருக்கும் போது, இனி ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது என்பதே மிக முக்கியம்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...
டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...
வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ...
டிசம்பர் 07,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.