வில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம்

நவம்பர் 11,2019  IST

Comments

டப்ளின் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விமோக்க்ஷாநந்தாஜி மகராஜ் – வெள்ளச்சி அருணாசலம் அழைப்பின் பேரில் வில்டன் இந்து ஆலயத்திற்கு விஜயம் செய்தார். நகரத்தார் வெளிநாடுகளில் இந்து ஆலயங்களை நிர்மாணித்து இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆன்மிக சேவையையும் சிறப்பாகச் செய்து வருவதை சுவாமிஜி வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார். இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள நீண்டுயர்ந்த மூலவர் முருகனுக்கு கந்த சஷ்டியையொட்டி பால் – தயிர் – பன்னீர் உள்ளிட்ட பதினெட்டு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. பக்தர்கள் “ அரோகரா “ கோஷத்துடன் காவடி எடுத்து ஆலயம் வலம் வந்தனர். சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிஜியும் காவடி எடுத்து வழிபட்டார்.


மாலையில் சாய் தர்பார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபட்டார். சுவாமி பாலகோபால் சுவாமிஜியுடன் இணைந்து கமல்ராஜ் இல்லத்தில் ஒரு மணி நேரம் பூஜை செய்து வருகை புரிந்தோரை ஆசிர்வதித்தார். பின்னர் ஆன்மிக மேன்மை – அவசியம் குறித்து சத்சங்கம் நிகழ்த்தினார். நவம்பர் முதல் தேதி ஆன்மிக யாத்திரையைத் தொடங்கிய சுவாமிஜி ஐந்தாம் தேதி நியூ ஜெர்ஸி திரும்பினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆற்றும் ஆன்மிகப் பணியை சுவாமிஜி பாராட்டி – வாழ்த்தி மகிழ்ந்து தமது யாத்திரை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

- தினமலர் வாசகர் வெ.உத்தமன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us