நியூயார்க் தமிழ்ச்சங்க தீபாவளிக் கொண்டாட்ட விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூயார்க் தமிழ்ச்சங்க தீபாவளிக் கொண்டாட்ட விழா

நவம்பர் 11,2019  IST

Comments

நவம்பர் 9, 2019 சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்ட விழாவை நடாத்தியது. திருமதி உமையாள் முத்து அவர்களின் சொற்பொழிவு, இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு அப்துல் அமீது அவர்களின் உரை மற்றும் நடாத்திய "நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா,சூப்பர் சிங்கர் பாடகர்கள் மற்றும் கனடா இசைக்குழுவினரின் மெல்லிசை, தீபாவளி விருந்து எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் நிறைந்த கோலாகலவிழாவாக ஏறக்குறைய ஆறு மணி நேரம் நடைபெற்றது.

விழாவில் நியூயார்க் சண்முகம் பெரியசாமியின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சங்க ஆலோசகர் மருத்துவர் திரு எம்.என்.கிருஷ்ணன் அவர்கள்,புதுச்சேரி அகன் பதிப்பித்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 7 கவிதை நூல்களை வெளியிட்டார். (பிரபல தமிழ் நடிகை எம் என் ராஜத்தின் சகோதரர் மருத்துவர் எம் என் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது).

இலங்கை அப்துல் ஹமீது, உமையாள் முத்து, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தலைவர் ரங்கநாதன் புருஷோத்தமன், நியூயார்க் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் காஞ்சனா பூலா ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

அமெரிக்க மண்ணில் தமிழகக் கவிஞர் ஒருவரின் 7 கவிதை நூல்களை வெளியிட்ட சிறப்பிடத்தை நியூயார்க் தமிழ்ச் சங்கம் பெற்றுள்ளது ! .

ராம் மோகன், குமரப்பன் அண்ணாமலை, பாலா சுவாமிநாதன் கதிர்வேல் குமாரராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆலோசனைக்குழுவினர் விழாவுக்கான ஏறபாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- தினமலர் வாசகர் சண்முகம் பெரியசாமி



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)