பிரான்ஸில் மங்கள சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸில் மங்கள சந்திப்பு

நவம்பர் 12,2019  IST

Comments

பிரான்ஸ், திராப் நகரில் மகாத்மா காந்தி சங்கமும் கெட்டி மேளம் சங்கமும் இணைந்து நடத்ததிய 12 வது மங்கள சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கெட்டி மேளம் சங்க தலைவர் திரு மதியழகன் வரவேற்புரையாற்றினார்.

பல நகரங்கலிருந்தும் எராளமான தமிழர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் இல்லத்து வரன்களை அறிமுகபடுத்தனர். மகாத்மா காந்தி சங்க மகளிர் அணியினர் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து கெட்டி மேளம் சங்க செயலாளர் திரு தெய்வபிரகாசம் மோட்டார் பைக்கில் உலகை சுற்றி வரும் திரு நாராயணன் என்ற இந்தியரை அறிமுக படுத்தினார். அவருடன் உரையாடிய போது தனக்கு 59 வயது என்றும் கடந்த 2015 ஆண்டு முதல் தனது மோட்டார் பைக்கில் 26 நாடுகளை கடந்து பிரான்ஸ் வந்துள்ளதாகவும் மேலும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு வாழும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்று உதவி செய்வது தனக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தார். குடித்து விட்டு வாகனம் ஓட்ட கூடாது, பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரு வருட காலம் பயணித்து பின் இந்தியா திரும்பி செல்லவிருப்பதாக தெரிவித்தார். ஸ்பெய்ன் செல்லும் அவருக்கு நிகழ்சியில் 510 யூரோக்கள் வழங்கப்பட்டது. வாழ்த்தவும் உதவவும் நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 0033752112445.

திரு பாலசுப்ரமணியன் என்ற அன்பர் பங்கேற்ற அனைவருக்கும் புது வருட காலண்டர் வழங்கினார். துணை தலைவர் திரு சுகுமாரன் நன்றி உரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

- நமது செய்தியாளர் ஜெயகௌரி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)