சிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்

நவம்பர் 12,2019  IST

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் – ஆராதனைகள் – அலங்காரங்கள் – விசேஷ மூலமந்திர ஹோமம் – வேதிகா அர்ச்சனை – மகா தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றன.

தினமும் இரவு பக்தர்கள் பங்கேற்ற ஸ்கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. சூர சம்ஹார நிகழ்வு பரவசமூட்டியது. முத்தாய்ப்பு நிகழ்வாக ஸ்ரீ முருகன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசைத் தட்டு எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தெய்விக நாதஸ்வர இசையுடன் திருமண மண்டபம் வந்தடைந்த காட்சி அற்புதம். தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.சீனிவாச பட்டாச்சார்யார் வழிநடத்த திருமணச்சடங்குகளை சிவாச்சார்யார் செய்தார்.

தலைமை அர்ச்சகர் திருமணச் சடங்குகளின் உள்ளார்ந்த பொருளை விளக்கியது பக்தர்களிடை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தெய்விகத் தம்பதியர் சர்வ அலங்கார நாயகர்களாகத் திகழ அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து – பூச் செண்டாடி – மாலை மாற்றி – கன்னிகாதானத் திருமாங்கல்யதாரணம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்களின் “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “ என்ற கோஷம் அடங்க நெடுநேரமாயிற்று. திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதி – அறுசுவைக் கல்யாண விருந்துண்டு முருகனருள் பெற்றுச் சென்றனர். ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us