மலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா

நவம்பர் 12,2019  IST

Comments

மலேசியா உலக சமதான ஆலய வேண்டுகோளை ஏற்று மலேசியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் நவம்பர் 11 ஆம் தேதி 11 மணி 11 நிமிடங்களுக்கு உலக அமைதி தினம் அனுஷ்டிக்குமாறு மலேசிய அரசு கல்வித்துறை அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் ஆணை பிறப்பித்திருந்தது. அதன்வழி நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மத, இன வேறுபாடில்லாமல் அனைத்து மாணவ, மாணவியரும் மகிழ்ச்சி தவழ “ நான் அமைதி காப்பேன், குடும்ப அமைதி காப்பேன், தேச அமைதி காப்பேன், உலக அமைதி காப்பேன் “ என உறுதி மொழி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

வளரும் இளம் தலைமுறையினரிடையே இந்த நல்லிணக்க ஞானத்தைப் பெருக்குவதே மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியாரின் நோக்கமாகும். இதே போல கோலாலம்பூர் லிம் கோ விங் பல்கலைக் கழக ஆளுகைக்குட்பட்ட 167 நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களில் உள்ள மாணவச் செல்வங்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டமை பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவை. மலேசியா கல்வி நிலைய மாணவரிடை இம்முயற்சியைக் கொண்டு சென்ற டாக்டர் சரஸிஜெம் நாயர் மற்றும ராஜாமணி ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியது.

- நமது செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us