“அரசனைக் கடந்த கடவுளைக் காண வேண்டும் என்ற ஏக்கம் ஒரு தனி மனிதரை மகானாகப் பரிணமிக்கச் செய்தது. ஒரு தனி மனிதருக்குத் தோன்றிய நற்சிந்தனை உலகிற்கு குண்டலினி யோகா மூல குருவை அருளியது. இயற்கைத் தத்துவத்தையும் – தன்னை அறிகின்ற மெய் ஞானத்தையும் உச்சிக் கண்ணில் தோற்றுவித்து தத்துவ தவ ஞானத்தை உலகிற்கீந்த மகானாக மலரச் செய்தது. அவரே தத்துவ தவ ஞானி – குண்டலினிப் பேராசான் – ஜெகத்மகாகுரு ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான். அவர்தம் ஞான உதய தினமே இன்று கொண்டாடப்படுகிறது “ என கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் ஆன்மிகப் பெரு விழாவில் உரையாற்றுகையில் திருமூர்த்தி மலை – தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், 'ஒரு தனி மனிதரை முழுமையாக்குவது தவமே. தவம் வேறு – நீங்கள் வேறு அல்ல. தவமே நீங்கள்தான். எண்ணுகின்ற எண்ணம் தவம் பேசுகின்ற பேச்சு தவம். செய்கின்ற செயல் தவம். செய்க தவம்...செய்க தவம். கடவுள் தன்மை – தெய்விகத் தன்மை என்பது அன்பின் உயர்நிலையே. அன்பு என்பது எதிர்பார்ப்பது அன்று. கொடுப்பது. மற்றவர்களுக்குக் கொடுக்கப் பிறந்தவர்கள் நீங்கள். மற்றவரிடமிருந்து எடுக்க நினைக்காதீர்கள். இவ்வுலகில் பிறந்த எல்லோருக்கும் மரணம் சம்பவிக்கும். அது துர் மரணமாக – அகால மரணமாக அமைதல் கூடாது. மரணத்தை வெல்ல உடல் நலம் – உள நலம் – உயிர் நலம் பெற வேண்டும். இவை பெற அறிவு நலம் பெற வேண்டும். இவைகளை வழங்க “ஆயுஷா' அமைப்பு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. பயன்படுத்தி எல்லா நலமும் வளமும் மகிழ்வும் நிறைவும் பெறுவீர்' என மகரிஷி தமதுரையின் முத்தாய்ப்புச் செய்தியாக அறிவித்தார்.
விழா ஒரு நிமிட அமைதியுடன் தொடங்கியது. குருகீதம், ஞான கீதம் சேர்ந்திசைக்கப்பட்டது. பின்னர் மலேசிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. குருமாதா தலைமையில் மங்கல மகளிர் அஷ்ட தீபம் ஏற்றினர். திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளைப் பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அறங்காவலர் கே.விநாயகம் ( சென்னை சில்க்ஸ் ) ஆயுஷா இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். டாக்டர் செந்தில் ஆயுஷா பணிகள் பற்றி விளக்கினார்.
விழாவில் மலேசியா பரிபூரண பரஞ்ஜோதி உயர்ஞான சபை குருபதவியாளர் பழனி, தியாகா, தொழிலதிபர் கண்ணன், ரவாங் சாரதா இல்லத் தலைவர் குமரன், மலாக்கா ஸ்ரீ ராமகிருஷ்ணா இல்லத் தலைவர் முரளி ஆகியோருக்கும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மலேசிய உலக சமாதான ஆலய தேசியத் தலைவர் சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலோசகர் சிவகுரு நிகழ்வை நெறிப்படுத்தினார். நிகழ்வில் கலந்து கொண்ட ஞானவான்களை மகரிஷி தனித்தனியே ஆசிர்வதித்தார். பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது வாசகர் க.து.அம்மையப்பன்
வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...
புதுடில்லி: மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்க துறையால், ஆகஸ்டில் கைது ...
டிசம்பர் 14,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.