'ப்யூர் யூத்' இந்தியப் பள்ளிகளுக்கு அமெரிக்க மாணவ-மாணவிகளின் சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'ப்யூர் யூத்' இந்தியப் பள்ளிகளுக்கு அமெரிக்க மாணவ-மாணவிகளின் சேவை

நவம்பர் 14,2019  IST

Comments

 

சில வருடங்களாக இங்கு செயல்படும் 'ப்யூர் யூத்' எனப்படும் நிதிதிரட்டும் சேவை முழுக்க முழுக்க பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளையும், மாணவர்களின் தேவைகளையும் உணர்ந்து நிதி அனுப்பிக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் பல மாநிலங்களில் இந்த அமைப்பு உள்ளது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆற்றும் மிகப்பெரிய பணி இது. அந்தந்த மாநிலங்களில் சிலர் பொறுப்பெடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் இச்சிறந்த பணிகளில் உதவி வருகின்றனர்.

சான் ஆண்டோனியோவில் அனுபமா அட்லூரி மற்றும் விஜயலக்ஷ்மி உலகநாதன் இங்கு செயலாற்றும் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி நடந்த 'சிட்டி தீபாவளி' நிகழ்ச்சியில் கூட பங்குகொண்டு திரட்டிய நிதியை, ஆந்திரப்ரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜக்கய்யாபேட்டாவில் உள்ள ZP பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

அதே போன்று வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சான் ஆண்டோனியோவில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தயாரித்து, டோர் டெலிவரி முறையில் மாணவ-மாணவிகளே வீடுகளுக்கு சென்று அளிக்க உள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் பணமும் அப்பள்ளியின் அறிவியல் கூடம் அமைக்க உதவப்போகிறார்கள்.

அனைத்து விவரங்களுக்கும் இத்துடன் துண்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

நல்ல மனம் கொண்டு செயல் படும் இப்பிள்ளைகளுக்கு நாமும் ஆதரவாய் இருப்போம். வாழ்த்துக்கள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us